ஆந்திரா ஸ்பெஷல் பேப்பர் ஸ்வீட் பூதரெகுலு ரெசிபி!

பூதரெகுலு ரெசிபி
பூதரெகுலு ரெசிபிImage credit - herzindagi.com

ந்திராவின் பண்டிகை கால ஸ்பெஷல் பேப்பர் ஸ்வீட் எனப்படும் பூதரெகுலு எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள். பார்ப்பதற்கு பேப்பர் போலவும் சாப்பிடுவதற்கு மிகவும் மென்மையாகவும் இருக்கும். வாயில் வைத்தவுடன் கரைந்து விடும் மிகப் பிரபலமான இனிப்பு இது. இதற்கு முதலில் ரைஸ் பேப்பர் தயாரிக்க வேண்டும். 

பச்சரிசி அரை கப் 

தண்ணீர் 6 கப் 

எண்ணெய் சிறிது 

நெய் சிறிது 

நாட்டுச்சக்கரை 1 கப்

பாதாம், பிஸ்தா/

முந்திரி, வால்நட் / பொடித்தது 3/4 கப்

ஏலப்பொடி ஒரு ஸ்பூன்

முதலில் அரை கப் பச்சரிசியை தண்ணீரில் கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்தெடுக்கவும். இதனை வடிகட்டியில் வடிகட்டி திரும்பவும் மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரு கப் நீர் விட்டு அரைத்து திரும்பவும் வடிகட்டவும்‌. இந்த மாவின் பதம் தேங்காய் பால் பதத்திற்கு இருக்க வேண்டும். மாவு கெட்டியாக இருந்தால் பேப்பர் ஸ்வீட் சரியாக வராது. எனவே நைசாக நீர்க்க அரைத்து வடிகட்டி தேங்காய் பால் பதத்திற்கு மாவை எடுத்துக் கொள்ளவும்.

நான் ஸ்டிக் கல்லில் கொஞ்சமாக எண்ணெயை தடவி ஒரு சிறு காட்டன்  துணியை மாவில் முக்கி தவா மிதமான சூட்டில் இருக்கும் போது மெல்லியதாக தேய்க்கவும். இவை முப்பதே செகண்டில் தானாக கல்லில் இருந்து பிரிந்து வந்துவிடும்.

ஸ்டஃபிங் செய்வதற்கு: 

தேவையான அளவு பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட் ஆகியவற்றை கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். அத்துடன் நாட்டுச்சக்கரை பவுடர், ஏலப்பொடி சேர்த்து ஸ்டஃப்பிங் ரெடி பண்ணவும்.

இதனை பப்ஸ் போல மடிக்கலாம் அல்லது ரோல் செய்து சாப்பிடலாம். வாயில் வைத்த உடனையே கரைந்து விடும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் அருமையான ஸ்வீட்.

பாதாம் பேரீச்சை லாடு!

இந்த பாதாம் பேரிச்சை லட்டு சத்தும் சுவையும் நிறைந்தது. செய்வதும் எளிது.

பாதாம் பருப்பு 100 கிராம் 

பொட்டுக்கடலை 50 கிராம் 

நாட்டு சர்க்கரை 150 கிராம் 

பேரிச்சம் பழம் 20 

முந்திரிப் பருப்பு 10

ஏலக்காய் தூள் 1/2 ஸ்பூன்

இதையும் படியுங்கள்:
உஷாரய்யா உஷாரு! உஷாரம்மா உஷாரு!
பூதரெகுலு ரெசிபி

நெய் 4 ஸ்பூன் பாதாம் பருப்பு வெறும் வாணலியில் கை பொறுக்கும் சூடு வரை வறுத்தெடுக்கவும். பொட்டுக்கடலையையும் சூடு வர வறுக்கவும். இரண்டையும் மிக்ஸியில் நைஸாக பொடித்துக் கொள்ளவும். கொட்டை நீக்கிய பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். முந்திரிப்பருப்பை உடைத்து சிறிதளவு நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.

வாய் அகன்ற பாத்திரத்தில் பொடித்த பாதாம், பொட்டுக்கடலை, பேரிச்சம் பழ துண்டுகள், வறுத்த முந்திரி துண்டுகள், ஏலப்பொடி, நாட்டு சக்கரை எல்லாவற்றையும் போட்டு சூடாக்கிய நெய் நான்கு ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து லட்டுகளாக பிடிக்கவும். சத்தான, குழந்தைகள் மிகவும் விரும்பும் லட்டு தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com