
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த சுவையான ஸ்னாக்ஸாகும்.
ஆந்திரா ஸ்பெஷல் பூர்ணம் பூரேலு:
உளுத்தம்பருப்பு 1 கப்
பயத்தம்பருப்பு 1 கப்
அரிசி மாவு 1/2 கப்
தேங்காய் துருவல் 1/2 கப்
ஏலக்காய் 4
வெல்லம் 1 கப்
வெண்ணெய்
எண்ணெய் தேவையான அளவு
உளுத்தம் பருப்பை கழுவி ஒரு மணிநேரம் ஊறவைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். அத்துடன் அரிசி மாவு மற்றும் 2 சிமிட்டு உப்பு சேர்த்து கலந்துவைக்கவும். இதனை அப்படியே இரண்டு மணி நேரம் மூடி வைத்துவிடவும்.
பயத்தம் பருப்பை குக்கரில் தேவையான அளவு நீர் விட்டு ரெண்டு விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வாணலியில் பொடித்த வெல்லம் சேர்த்து வேகவைத்த பயத்தம் பருப்பையும் போட்டு நன்கு கிளறவும். தேங்காய்த் துருவல், ஏலக்காய் பொடித்தது சேர்த்து ஒரு ஸ்பூன் வெண்ணையும் கலந்து நன்கு சுருள கிளறி இறக்கவும். ஆறியதும் சின்ன சின்ன உருண்டைகளாக செய்து வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு எண்ணெய் நன்கு சூடானதும் பயத்தம் பருப்பு உருண்டைகளை அரைத்து வைத்துள்ள உளுந்து மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும். மிகவும் ருசியான ஆந்திரா ஸ்பெஷல் பூர்ணம் பூரேலு தயார்.
சீனி காராச்சேவ்:
கடலை மாவு 1 கப்
அரிசி மாவு 1/2 கப்
உப்பு 1 சிட்டிகை
வெண்ணெய் 2 ஸ்பூன்
சர்க்கரை 3/4 கப்
ஏலக்காய் 4
எண்ணெய் பொரிக்க
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, ஒரு சிமிட்டு உப்பு, வெண்ணெய் ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் தெளித்து பிசையவும். முறுக்கு அச்சில் காரா சேவ் பிழியும் தட்டைப் போட்டு அதில் மாவை வைத்து எண்ணெயில் பிழியவும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து நன்கு மொறுமொறுப்பாகும் வரை வேக விட்டு எடுக்கவும்.
மற்றொரு வாணலியில் சர்க்கரை, 1/4 கப் தண்ணீர்விட்டு நன்கு கொதிக்க விடவும். ரெட்டைக் கம்பி பாகு பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு பொரித்து வைத்துள்ள காராசேவுகளை சேர்த்து நன்கு கலந்து விடவும். ஆறியதும் சர்க்கரை பூத்துக்கொண்டு இனிப்பு காராச்சேவு சாப்பிட தயாராக இருக்கும். 10 நாட்கள் ஆனாலும் சுவை குன்றாது இந்த சீனி காராச்சேவு.