nutritious dishes...
healthy panangkizhangu.

ஆரோக்கியமான பனங்கிழங்கு பயன்படுத்தி சத்தான உணவு வகைகள் செய்யலாம் வங்க!

Published on

பனங்கிழங்கு அடை

தேவையானவை:

பனங்கிழங்கு –1 கப் (துருவியது)

அரிசிமாவு – 1 கப்

உளுத்தம்பருப்பு மாவு – ¼ கப்

வெங்காயம் – 1 (நறுக்கியது)

கறிவேப்பிலை – ஒரு கிளை (நறுக்கியது)

மிளகாய்ப்பொடி – 1 ஸ்பூன்

சீரகம் – ½ ஸ்பூன்

பச்சைமிளகாய் _1

இஞ்சி சீவியது _1 ஸ்பூன் மல்லிதழை _சிறிதளவு (நறுக்கியது)

உப்பு – தேவையான அளவு

தண்ணீர் – தேவைக்கு ஏற்ப

எண்ணெய் – தேவைக்கு

செய்முறை:  

பனங்கிழங்கை சுத்தம் செய்து தோல் நீக்கி நன்றாக துருவி வைத்துக்கொள்ளவும்.  ஒரு  பாத்திரத்தில் அரிசிமாவு, உளுத்தம்பருப்பு மாவு, மிளகாய்ப்பொடி, சீரகம், உப்பு மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து  துருவல் செய்த பனங்கிழங்கையும் சேர்க்கவும்.   தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடை மாவு பதத்திற்கு பிசையவும். மாவு தோசைமாவு பதம் இருக்க வேண்டும்.  தோசைக்கல்லை நன்கு சூடாக்கி, ஒரு சிறு கரண்டி எண்ணெய் தடவவும். மாவை ஊற்றி தோசை போல் பரப்பவும்.  அடிக்கடி திருப்பி, இரண்டு பக்கமும் நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.

சூடான பனங்கிழங்கு அடையை தயிர், அல்லது தக்காளி சட்னியுடன் பரிமாறலாம்.

பனங்கிழங்கு கஞ்சி

பனங்கிழங்கு கஞ்சி ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான பானம் ஆகும்.

தேவையானவை:

பனங்கிழங்கு – 1 கப் சின்ன துண்டுகளாக வெட்டியது

அரிசி – 2 டேபிள்ஸ்பூன்

தேங்காய்ப்பால் – 1 கப்

பனைவெல்லம் – ½ கப்

ஏலக்காய்ப்பொடி – ¼ ஸ்பூன்

உப்பு – சுவைக்கேற்ப

தண்ணீர் – 3 கப்

இதையும் படியுங்கள்:
சுவையான உப்பு உருண்டை- பொரியரிசி உருண்டை ரெசிபிஸ்!
nutritious dishes...

செய்முறை: 

பனங்கிழங்கை தோல் சீவி, சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.  ஒரு பானையில் தண்ணீர் சேர்த்து, பனங்கிழங்கை நன்றாக வேக வைக்கவும். வேகும்போது, அரிசி சேர்த்து மேலும் 10-15 நிமிடம் மிதமான தீயில் சமைக்கவும். வேகும் பனங்கிழங்குடன் பனை வெல்லத்தை சேர்த்து உருகும் வரை கலக்கவும். கஞ்சி நன்றாக சுண்டியதும், தேங்காய் பாலை சேர்த்து சிறிது நேரம் சமைக்கவும். தேங்காய் பாலை சேர்த்தப் பிறகு கஞ்சியை கொதிக்க விடாமல் ஏலக்காய் பொடி மற்றும் சிறிது உப்பு சேர்த்து இறுதியாக மிதமான சூட்டில் இறக்கவும். இதை மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடலாம். கூடுதல் சுவைக்கு, முந்திரி அல்லது உலர்ந்த திராட்சை சேர்க்கலாம்.

பனங்கிழங்கு பருப்பு குழம்பு

பனங்கிழங்குடன் பருப்பை இணைத்து சமைக்கும் குழம்பு மிகவும் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

தேவையானவை:

பனங்கிழங்கு – 1 கப் துண்டுகளாக வெட்டியது

துவரம்பருப்பு – ½ கப்

சின்னவெங்காயம் – 10 (நறுக்கியது)

தக்காளி – 1 (நறுக்கியது)

புளிச்சாறு _3 ஸ்பூன்

மஞ்சள்தூள் – ¼ தேக்கரண்டி

மிளகாய்தூள் – 1 தேக்கரண்டி

சாம்பார்த்தூள் – 1 தேக்கரண்டி

எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

கடுகு – ½ தேக்கரண்டி

கறிவேப்பிலை – ஒரு கிளை

உப்பு – தேவையான அளவு

தண்ணீர் – தேவைக்கு ஏற்ப

இதையும் படியுங்கள்:
குழந்தைகளுக்கு ஏற்ற குதூகல ரெசிபிகள் இதோ..!
nutritious dishes...

செய்முறை: 

துவரம்பருப்பை நன்றாக கழுவி, ஒரு குக்கரில் 2 கப் தண்ணீர், மஞ்சள்தூள் சேர்த்து 3 விசில் வேகவைத்து மசித்து கொள்ளவும். பனங்கிழங்கை தோல் சீவி  துண்டுகளாக வெட்டி வெறும் நீரில் 10 நிமிடம் வரை வேகவைத்துக் கொள்ளவும் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். மிளகாய்தூள், சாம்பார்தூள், உப்பு சேர்த்து மசித்த பருப்பை சேர்க்கவும். பின்னர்  புளிச்சாறு சேர்த்து நன்றாக கிளறவும். வேக வைத்த பனங்கிழங்கை இதனுடன் சேர்த்து 5-10 நிமிடங்கள் மிதமான தீயில் சமைக்கவும். குழம்புக்கு  தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சுண்டும் வரை வைக்கவும். சூடாக இறக்கி கொத்தமல்லி தழைகள் தூவி சாதம் அல்லது இட்லி, தோசையுடன் பரிமாறவும்.

logo
Kalki Online
kalkionline.com