ஆந்திரா ஸ்பெஷல் Punugulu Recipe!

Punugulu Recipe.
Punugulu Recipe.

தென்னிந்திய உணவு வகைகளை பொறுத்தவரை ஆந்திரா அதன் காரமான சுவை மற்றும் தனித்துவமான சமையல் முறைகளுக்கு அறியப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்த பிரபலமான உணவுகளில் Punugulu என்ற உணவும் அடங்கும். வெளியே பார்ப்பதற்கு கரடு முரடாகவும் ஆனால் உள்ளே மென்மையாகவும் இருக்கும் இந்த உணவு, நம் அனைவரும் கட்டாயம் முயற்சிக்க வேண்டிய ஒரு சூப்பர் ரெசிபியாகும். 

இந்த பதிவில் ஆந்திரா ஸ்பெஷல் புனுகுலு ரெசிபியை வீட்டிலேயே எப்படி செய்வது எனப் பார்க்கலாம்

தேவையான பொருட்கள்: 

  • 2 கப் அரிசி மாவு 

  • ½ கப் உளுத்தம் பருப்பு 

  • ¼ கப் ரவை கப் 

  • ¼ கப் நறுக்கிய வெங்காயம் 

  • 3 பச்சை மிளகாய் 

  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் 

  • ¼ கப் கொத்தமல்லித் தழை 

  • ½ ஸ்பூன் சீரகம் 

  • தேவையான அளவு உப்பு 

  • பொரிப்பதற்கு எண்ணெய்

செய்முறை

முதலில் உளுத்தம் பருப்பை சுமார் 4 முதல் 5 மணி நேரம் ஊறவைத்து, மென்மையாக பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு, உளுத்தம் மாவு, ரவை, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், நறுக்கிய கொத்தமல்லித் தழை, சீரகம் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். 

இதையும் படியுங்கள்:
உலகில் மிகவும் விலை உயர்ந்த தாமரைப் பட்டு துணி துணிகள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
Punugulu Recipe.

இந்த கலவையை ஒரு சுத்தமான துணியால் மூடி 6 முதல் 8 மணி நேரத்திற்கு இரவில் புளிக்க விடவும். மாவு புளித்தால் மட்டுமே புனுகுலுவின் சுவை மற்றும் அமைப்பு நன்றாக இருக்கும். 

மாவு புளித்ததும் ஒரு கடாயில் பொரிப்பதற்குத் தேவையான எண்ணெய் ஊற்றி மிதமாக சூடானதும், மாவை கையில் எடுத்து சிறு சிறு உருண்டைகளாக மெதுவாக விடுங்கள். இது பொன்னிறமாக மாறும் வரை நன்கு பொரித்து வைத்து எடுத்தால், ஆந்திரா ஸ்பெஷல் புனுகுலு தயார். இதை தேங்காய் சட்னி அல்லது கார சட்னியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும். 

ஒருமுறை வீட்டில் முயற்சித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com