ஆந்திரா ஸ்பெஷல் Gorumitilu ஸ்வீட் செய்யலாம் வாங்க! 

Gorumitilu
Gorumitilu Recipe

தென்னிந்தியாவில் குறிப்பாக ஆந்திராவில் பண்டிகைகள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளின் போது பல்வேறு வகையான இனிப்புகள் தயாரிக்கப்படுகின்றன. அத்தகைய இனிப்பு வகைகளில் ஒன்றுதான் “கோருமிட்டிலு”. இந்த இனிப்பு அரிசி மாவு, ரவை மற்றும் வெல்லம் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இதன் தனித்துவமான சுவை மற்றும் மொருமொருப்பான தன்மை காரணமாக எல்லா வயதினரும் விரும்பி உண்ணும் ஒரு ஸ்பெஷல் இனிப்பாகும். சரி வாருங்கள் இந்தப் பதிவில் ஆந்திரா ஸ்பெஷல் Gorumitilu எப்படி செய்வது எனப் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்:

  • அரிசி மாவு - 1 கப்

  • ரவை - 1/4 கப்

  • நெய் - 2 டேபிள் ஸ்பூன்

  • சர்க்கரை - 1/2 கப்

  • ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்

  • உப்பு - ஒரு சிட்டிகை

  • தண்ணீர் - தேவையான அளவு

  • எண்ணெய் - பொரிக்க

செய்முறை: 

முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் அரிசி மாவு மற்றும் ரவையை சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் அதில் கொஞ்சம் நெய் சேர்த்து கலக்கியதும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவை மென்மையாக பிசைந்து கொள்ளவும். 

பின்னர் மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அவற்றை தட்டையான வடிவத்தில் தட்டிக் கொள்ளவும். அடுத்ததாக ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தட்டி வைத்த உருண்டைகளை பொன்னிறமாக பொரித்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். 

இதையும் படியுங்கள்:
உயர் ரத்த சர்க்கரை அளவின் 6 அறிகுறிகள்… உங்களுக்கு இருந்தால் ஜாக்கிரதை! 
Gorumitilu

சர்க்கரை பாகு செய்வதற்கு, ஒரு வாணலியில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கம்பி பதத்திற்கு வரும் வரை பாக்கு தயாரிக்கவும். இப்போது அந்த பாகில் பொரித்து வைத்துள்ள கோருமிட்டிலுவை சேர்த்து கிளறவும். கிளறும்போது சிறிதளவு ஏலக்காய் பொடி தூவிக் கொள்ளுங்கள். அவ்வளவுதான், சூப்பரான சுவையில் ஆந்திரா ஸ்பெஷல் கோருமிட்டிலு தயார். 

இந்த ரெசிபி எளிதாக தயாரிக்கக்கூடிய ஒரு சுவையான இனிப்பு. இந்த இனிப்பை வீட்டிலேயே செய்து உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து மகிழ்ச்சியாக உண்ணுங்கள். கோருமிட்டிலுவை மேலும் சுவையாக மாற்ற நெய்யில் வறுத்த முந்திரி பாதாம் மற்றும் திராட்சை போன்றவற்றை சேர்க்கலாம். நீங்கள் விருப்பப்பட்டால் சர்க்கரை பாகிற்கு பதிலாக தேங்காய் பாலில் ஊறவைத்து சாப்பிட்டாலும் கோருமிட்டிலு சூப்பர் சுவையில் இருக்கும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com