உடலுக்கு வலு சேர்க்கும் ஆஞ்சநேயர் வடை!

ஆஞ்சநேயர் வடை...
ஆஞ்சநேயர் வடை...

வ்வொரு முறையும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு போகும் போது அங்கு பக்தர்களால் சாற்றப்படும் வடை மாலையிலிருந்து ஒரு வடை கிடைக்குமா என்று ஏங்குவோம்.

சற்று கடினமாக உள்ள இந்த வடையை சாப்பிடுவதற்கு பற்களின் வலிமை நன்றாக இருக்க வேண்டும். பற்களின் வலிமையுடன் உடல் வலிமையும் நன்றாக இருக்க வேண்டும் என்றால் இந்த வடையை அடிக்கடி செய்து குழந்தைகளுக்கு தந்து நாமும் சாப்பிட வேண்டும். அப்படி என்ன இதில் இருக்கிறது? இதில் சேர்க்கப்படும் உளுந்தும் மிளகும் நமது உடலுக்குத் தேவையான எதிர்ப்பு சக்தி மற்றும் உடல் வலுவுக்கு தேவையான சத்துக்களை தருவதுதான் இதன் சிறப்பே. இதை நாம் வீட்டிலேயே செய்ய முடியாதா? ஏன் முடியாது.

இதோ வீட்டிலேயே செய்து எளிதாக செய்து சாப்பிடலாம் இந்த ஆஞ்சநேயர் மிளகு வடையை.

தேவையான பொருட்கள்:
தோல் நீக்காத கருப்பு உளுந்து - அரை கப் மிளகு - ஒரு டேபிள் ஸ்பூன், எண்ணெய் -பொரிப்பதற்கு தேவையான அளவு, உப்பு -தேவையான அளவு
பச்சரிசி - அரை டேபிள் ஸ்பூன்

செய்முறை:
ருப்பு உளுந்தை கழுவி (தோலுடன்) 2 அல்லது 3 மணி நேரம் நன்றாக ஊற விடவும். பச்சரிசியையும் கழுவி ஊற வைக்கவும். நன்றாக ஊறிய உளுந்தை ஒரு வடிகட்டியில் வடித்து நீரின்றி கிரைண்டர் போட்டு அரைக்கவும். தேவைக்கு மட்டும் சிறிது நீர் தெளித்து அரைக்க வேண்டும். உடன் ஊறிய பச்சரிசியும் சேர்த்து  அரைக்கவும். அரைத்து எடுத்த மாவில் மிளகுகளை ஒன்று இரண்டாக உடைத்துப் போட்டு தேவையான உப்புடன், காய்ந்த எண்ணெய் சிறிது சேர்த்து நன்கு பிசைந்து எண்ணெய் தடவிய கவர் அல்லது கைகளில் நடுவில் ஓட்டையுடன் மெல்லிய வடைகளாகத் தட்டி  நன்றாக காய்ந்த எண்ணெயில் போட்டு இருபுறமும் சிவக்க வெந்ததும் எடுக்கவும். சத்து மிகுந்த இதை ஒரு மாதமானாலும் வைத்து சாப்பிடலாம்.

இதையும் படியுங்கள்:
சாலக் பழத்திலிருக்கும் சத்துக்கள் எத்தனை தெரியுமா?
ஆஞ்சநேயர் வடை...

குறிப்பு - இதில் சீரகம் சிறிது சேர்ப்பது அவரவர் விருப்பம். பச்சரிசிக்கு பதில் பச்சரிசி மாவையும் பயன்படுத்தலாம். அரை கப் உளுந்து போட்டு முதலில் செய்து பாருங்கள். சாதாரண உளுந்தையும் பயன்படுத்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com