இந்த 5 பொடி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?

சுண்டக்காய் பொடி...
சுண்டக்காய் பொடி...

விதவிதமான பொடி வகைகளை வீட்டில் செய்து வைத்திருப்பது மிக மிக அவசியம். சட்னி சாம்பார் வைக்க நேரமில்லை என்றாலும் இந்தப் பொடிகளையே வைத்து சாப்பிட்டு விடலாம் .அவசரத்திற்கு பயன்படும். சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக  மருத்துவ குணம் நிறைந்து ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக இருக்கும். அப்பேர்ப்பட்ட பொடி வகைகளைப் பற்றி இப்பதிவில் காண்போம். 

* சுண்டக்காயை சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு வறுத்து உப்பு, மிளகு, சீரகம் கருவேப்பிலை பொடித்துப் போட்டு உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர மூலம், மந்தம் செரியாமை குணமாகும். 

சுண்டைவற்றல், கருவேப்பிலை, மாங்கொட்டை பருப்பு, ஓமம், நெல்லிவற்றல், மாதுளை ஓடு, வெந்தயம் சம அளவாக எடுத்து  தனித்தனியாக   இளவறுப்பாக வறுத்து பொடி செய்து, 1ஸ்பூன் பொடியை இரண்டு வேளை ஒரு டம்ளர் மோருடன் கலந்து சாப்பிடலாம். மேலே கூறிய பொருட்களுடன் வர மிளகாய், உப்பு சேர்த்து பொடித்து சாதத்தில் நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட சுவையின்மை, வயிற்றுப்போக்கு மார்புச் சளி, நீரிழிவு அனைத்தும் கட்டுப்படும். 

பருப்பு வகைகள்
பருப்பு வகைகள்

* உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, பயத்தம் பருப்பு, பொட்டுக்கடலை வேர்க்கடலை, ஆளி விதை அனைத்தையும் தனித்தனியாக வறுத்து அதனுடன் வர மிளகாய், உப்பு சேர்த்து பொடித்து பருப்பு பொடியுடன் ஆளி விதையை சேர்த்து பயன்படுத்தலாம். இட்லி பொடி, கருவேப்பிலை பொடி போன்றவற்றை அரைக்கும் பொழுது தேவையான அளவு ஆளி விதையும் அதனுடன் சேர்த்து பொடிக்க வேண்டும் .இந்த பொடியை தினசரி உணவுடன் சேர்த்து உட்கொள்ள ஒமேகா  -3 அப்படியே உடம்பில் சேரும். 

மூளையின் ஞாபக சக்தி செல்கள் சுருங்காமல் பார்த்துக் கொள்வதில் இது முதல் இடத்தில் இருக்கிறது. நாம் சாப்பிடும் பல பொருட்களில் சில உணவுகளில் ஒமேகா-3 யும், நார்ச்சத்தும் இருக்கின்றன. என்றாலும், லிக்னன்ஸ் மூலக்கூறு ஆளி விதையில் இருக்கும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் ஆக்ஸிஜன் எதிர்ப்பு குணங்கள் பிரசித்து பெற்றவை ஆகும். இது பிற தாவர உணவுகளை விட 750 முதல் 800 மடங்கு ஆளி விதையில் உள்ளது. ஆதலால் ஆளி விதையை வறுத்துப் பொடித்து தினசரி இரண்டு ஸ்பூன் அளவு சாப்பிடுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

* வல்லாரை இலைகளை சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி அதனுடன் கடலைப்பருப்பு, துவரம் பருப்பு வகைகளை வறுத்து, குண்டு மிளகாய் வற்றல், உப்பு, பெருங்காயம் சேர்த்து பொடித்து நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். குழந்தைகளுக்கு ஞாபக சக்தி, அறிவுக கூர்மை ,சிந்தனை திறன் வளரும். பெண்களுக்கு மாதவிடாயைத் தூண்டவும் வாய்ப்புண், வயிற்றுக் கடுப்பு, கழிச்சல், விரை வீக்கம், காயம், படை ஆகியவற்றை குணப்படுத்தும் மருந்தாகவும் வல்லாரை பயன்படுகிறது .வலிப்பு நோய் உள்ள குழந்தைகளுக்கு வல்லாரையை மருந்தாக உள்ளுக்குள் கொடுக்கக் கூடாது. வல்லாரையை எந்த ரூபத்திலும் அவர்களுக்கு மருத்துவரின் அனுமதி இல்லாமல் கொடுக்காமல் இருப்பதே நல்லது. 

வல்லாரை...
வல்லாரை...

* பழைய வேப்பம்பூவை நெய்யில் வதக்கி அதனுடன் கருவேப்பிலை, கருப்பு உளுந்து, பூண்டு, பழம் புளி வர மிளகாய், உப்பு  அனைத்தையும் வறுத்துப் பொடிக்க வேண்டும். இதை இட்லி, தோசை,  இடியாப்பத்துடன் சாதத்துடன் பிசைந்து சாப்பிட கல்லீரலை நன்கு இயக்குவிக்கும். பசியின்மை, உடல் தளர்ச்சி நீங்கும். வயிற்று கழிவுகளை அகற்றும். சுவையின்மை மாறும். 

இதையும் படியுங்கள்:
ருசிக்க ரசிக்க சூப்பர் சென்னா மசாலா கிரேவி!
சுண்டக்காய் பொடி...

* கருவேப்பிலை, மல்லி விதை, உளுத்தம் பருப்பு, பூண்டு, புளி, சீரகம், மிளகாய் வற்றல், உப்பு அனைத்தையும் வறுத்து பொடித்து  சாதத்தில் நெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம். ரத்தத்தை சுத்தப்படுத்தும். கண்பார்வை தெளிவடையும். குடலில் உள்ள கிருமிகளை அழிக்கும். நகங்களில் ஏற்படும் நோய்களை குணப்படுத்தும். கை கால் நடுக்கத்தை போக்கும். முடியை செழிக்க வளரவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com