வடாம் போடப் போறீங்களா? கொஞ்சம் கவனியுங்க!

வெங்காய வடாம்...
வெங்காய வடாம்... cookpad.com

ம்மர் வந்துவிட்டாலே வீட்டில் என்னென்ன வத்தல், வடாம் போடலாம் என்று தீர்மானித்து வைத்திருப்போம். அது இல்லாமல் கொத்தவரங்காய், அவரைக்காய் மோர் மிளகாய் என்று அது ஒரு பக்கம் போடுவதற்கு ரெடியாக்கி வைத்திருப்போம். அப்படி போடும்போது சில சமாளிப்பு ரகசியங்களையும் தெரிந்து வைத்துக் கொண்டால் தக்க சமயத்தில் உதவும். அதனைப் பற்றி இப்பதிவில் காண்போம்! 

சில நேரங்களில் ஜவ்வரிசி வடாம் போடுவதற்கு கூழ் தயார் செய்யும் பொழுது கெட்டி ஆகிவிடும். அப்படி ஆகிவிட்டால் அதில் வெங்காயம் நறுக்கிப் போட்டு உருட்டி உருட்டி வைக்கலாம். ஜவ்வரிசி  வெங்காயம் வடகம் ரெடி ஆகிவிடும் .பொரித்தால் சூப்பராக இருக்கும். 

சில நேரங்களில் சர்க்கரை பொங்கல் செய்யும் பொழுது அதிகமாகிவிடும். அதை அப்படியே மிக்ஸியில் அரைத்து  குட்டி குட்டி உருண்டையாக வடாமாக்கி வெயிலில் நன்றாக காயவைத்து எடுத்து வைத்துக் கொண்டால். கார வடாம் போன்றவற்றை வறுக்கும் பொழுது இதையம் சேர்த்து வறுத்து கொடுக்கலாம். நல்ல ருசியாக இருக்கும். 

வத்தல்...
வத்தல்...

ஜவ்வரிசி பாயசம் மீந்து விட்டாலும் இதே போல் பிளாஸ்டிக் ஷீட்டை வெயிலில் விரித்து பாயசத்தை ஸ்பூனில் எடுத்து ஊற்றி நன்றாக காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ளலாம் .எண்ணெய்யில் பொரித்து சாப்பிட ஸ்வீட் வடாம் அபாரமாய் இருக்கும் . குட்டீஸ் ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள்.

பரங்கிக்காய் அதிகம் வாங்கி விட்டீர்களா ?அதன் தோலை நீக்கி விட்டு பொடிப் பொடியாக அரிந்து வெயிலில் உலர்த்தி வைத்துக் கொண்டால் கொதிக்கும் குழம்பில் போட்டு எடுக்கலாம். வத்தல் குழம்பு ருசியாக இருக்கும். பரங்கிக்காயும் உபயோகமாக்கினதாக இருக்கும். 

பாகற்காயை மெல்லிய சிறு சிறு இலைகளாக நறுக்கி, விதைகளை நீக்கிவிட்டு, பச்சை மிளகாய், நறுக்கிய பூண்டு, எலுமிச்சைச் சாறு அனைத்தையும் விட்டு உப்புப் போட்டு நன்றாக குலுக்கி தினசரி வெயிலில் வைத்து எடுத்தால் ஊறுகாய்உப்பு, புளிப்பு, கசப்பு, உறைப்பு என்று அனைத்தும் சமமானததாய் இருக்கும். கோடையில் தயிர் சாதத்திற்கு கொடுத்துக் கொள்ள அசத்தலா இருக்கும். நீரிழிவு காரர்களுக்கும் ஏற்றது. 

உருளைக்கிழங்கை வாங்கி தோல் சீவி ,சிப்ஸ் கட்டையில்சீவி, அதை கொதிக்கும் வெந்நீரில் உப்பு எலுமிச்சம்பழம் பிழிந்த சாற்றில் போட்டு எடுத்து, வெயிலில் நன்கு உலர்த்தி எடுத்து வைத்துக் கொண்டால், அவ்வப்பொழுது எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம். 

இதையும் படியுங்கள்:
ஆடம் ஆப்பிள் என்றால் என்னன்னு தெரியுமா?
வெங்காய வடாம்...

பச்சை மிளகாய்,  உப்பு, பெருங்காயத்தை அரைத்து, மாங்காயை பொடியாக நறுக்கி அதற்கு தேவையான அந்த கார விழுதையும் அதில் போட்டு பிசிற சூப்பர் காரமாங்காய் ரெடி. 

அதேபோல் ஊறுகாய் போடும்பொழுது சிறிது மஞ்சள் சேர்த்தால் ஊறுகாய்கள் கெட்டு போகாமல் இருக்கும். எலுமிச்சை, நெல்லிக்காய், மாங்காயில் ஊறுகாய் போடும் போது சிறிது கடுகு எண்ணெய் சேர்த்தாலும் கெடாமல் இருக்கும். ஊறுகாய் பாட்டில் மூடியை பிளாஸ்டிக்கில் போட்டால் சீக்கிரம் கெடாது. அதேபோல் கல்லுப்பில் ஊறுகாய் போடுவது தான் சிறந்தது. இதுபோல் வத்தல் ,வடாம், ஊறுகாய் எதை போட்டாலும் அதன் பாதுகாப்பை மனதில் வைத்து பக்குவமாய் போட்டால் நீண்ட நாட்கள் கேடு வராமல் உபயோகப்படுத்தலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com