ஆடம் ஆப்பிள் என்றால் என்னன்னு தெரியுமா?

Do you know what an Adam apple is?
Do you know what an Adam apple is?https://matzav.com
Published on

டம் ஆப்பிள் (Adam apple) என்றதும் ஆப்பிளில் இது ஒரு வகையாக இருக்கும் என்று நினைத்து அதை பழக்கடைகளில் தேடாதீர்கள். ஆண்களை கவர்ச்சியாக காட்டும் தசைகள், கன்னக்குழி போலவே இயற்கையாகவே அவர்களை மிகவும் அழகாகக் காட்டுவதுதான் ஆடம் ஆப்பிளாகும். பெரும்பாலான பெண்கள், ஆண்களுக்கு இருக்கும் ஆடம் ஆப்பிளை கவர்ச்சியான ஒன்றாகவே கருதுகிறார்கள்.

ஆண்களுக்கு தொண்டை பகுதியில் வீக்கம் போன்ற ஒரு அமைப்பு இயற்கையாகவே இருக்கும். அது சிலருக்கு இருப்பதை தெளிவாகவே காண இயலும். அதற்கு பேர்தான் ஆடம் ஆப்பிளாகும். அது இருப்பதற்கான காரணம் அதுவே நம்முடைய குரல்வளையை பாதுகாக்கிறது. பருவமடையும்போது கழுத்துப் பகுதியில் இருக்கும் குருத்தெலும்பு பெரிதாகும். ஆண், பெண் இருவருக்குமே ஆடம் ஆப்பிள் இருக்கிறது என்றாலும், இது பெண்களை காட்டிலும் ஆண்களுக்கே பெரிதாக இருக்கும். இதை ‘லேரிஞ்சியல் பிராமினென்ஸ்’ என்றும் கூறுவர்.

ஆடம் ஆப்பிள் எல்லோருக்கும் இருப்பதில்லை. சிலருக்கு ஆடம் ஆப்பிள் இருக்கும், சிலருக்கு இருக்காது. இதனால் ஆரோக்கியத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. சிலர் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றாற்போல, அறுவை சிகிச்சையின் மூலம் இதை பெரிது அல்லது சிறிதாக்கி கொள்கிறார்கள்.

‘ஆடம் ஆப்பிள்’ என்ற பெயர் எங்கிருந்து வந்தது தெரியுமா? ஆதாமும், ஏவாலும் தடை செய்யப்பட்ட பழத்தினை உண்ணும்போது, கடவுள் ஆதாமுக்கு அதை தொண்டையிலேயே தடுத்து நிறுத்திவிட்டார் என்பது கதை. அதுவே ஆடம் ஆப்பிள் என்றானது. ஆடம் ஆப்பிள் குரல்வளைக்கு காயம் ஏற்படாமல் பாதுகாக்கிறது. அதைத் தவிர்த்து அதற்கென்று தனி வேலை ஏதும் கிடையாது. பெரிதாக இருக்கும் ஆடம் ஆப்பிள் குரல் ஆழமடைவதற்கும் மற்றும் முதிர்ச்சிக்கும் காரணம் என்று நம்பப்படுகிறது.

சில நேரங்களில் இந்த வீக்கம் போன்ற அமைப்பை கண்களால் காண முடியாவிட்டாலும் தொட்டு பார்க்கும் போது கண்டுபிடித்து விட முடியும். ஆடம் ஆப்பிள் தைராய்ட் குருத்தெலும்பால் ஆனதாகும். வெளியிலிருந்து பார்க்கும்போது வீக்கம் போன்ற அமைப்பை கொண்டிருந்தாலும், உள்ளிருந்து பார்க்கும்போது இரண்டு குருத்தெலும்புகளை கொண்டிருக்கும். அது சேர்ந்து 'V' போன்ற அமைப்பை குரல்வளையில் உருவாக்கும். ஆடம் ஆப்பிள் பெரிதாக இருப்பதால் பிரச்னையில்லை. எனினும் தொண்டையில் புண், உணவு விழுங்குவதில் கஷ்டம், மூச்சு விடுவதில் பிரச்னை, இருமல், சோர்வு, அதிகப்படியான வியர்வை இருக்கும்போது மருத்துவரை அணுகுவது சிறந்ததாகும்.

இதையும் படியுங்கள்:
நீல யானையை பற்றிய சைக்காலஜியை தெரிந்து கொள்ளுங்கள்!
Do you know what an Adam apple is?

சிலர் ஆடம் ஆப்பிளை அறுவை சிகிச்சை மூலம் பெரிதாக்கிக் கொள்வது அல்லது சிறிதாக்கிக் கொள்வதுண்டு. குரல்வளையில் உள்ள குருத்தெலும்பை சேர்ப்பதாலோ அல்லது எடுப்பதாலோ இதை அவரவர் விருப்பப்படி மாற்றி அமைத்துக் கொள்கின்றனர். இரண்டு ஆடம் ஆப்பிள்கள் சிலருக்கு இருப்பதுண்டு. இது கிரிக்காய்ட் மற்றும் தைராய்ட் குருத்தெலும்புகளாகும்.

ஆண்களுக்கு இருக்கும் ஆடம் ஆப்பிள் அழகாகவும், கவர்ச்சியாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன் கிரீஸிலும், ரோமிலும் ஆண்களுக்கு இது ஒரு தகுதியாகவே கருதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com