இது சாம்பார் வடை அல்ல; சம்பார் வடை! - ஒரு சுவையான அறிமுகம்!

Tasty vadai recipe
Arisi vadai recipewww.maalaimalar.com
Published on

ம் தமிழக உணவு வகைகளில் அனைவரும் விரும்பும் வகையில் இருப்பது சாம்பார் வடை. மணக்கும் பருப்பு சாம்பாரில் குளிக்கும் மெதுவடைகளை அனைவரும் விரும்புவார்கள். ஆனால் என் பாட்டி வீட்டில் சுடும் இந்த வடைக்கு சம்பார் வடை என்று பெயர். இதற்கு ஏன் இந்தப் வந்தது என்ற கேள்விக்கு இதுவரை எனக்கு பதில் கிடைக்கவில்லை. மோர் வடை என்றும் அரிசி வடை என்றும் இதை சொல்வார்கள். 

இதன் சுவை வித்தியாசமான ஒன்றாக இருக்கும். பற்களின் வலிமை இதைக் கடிக்கும் போதுதான் தெரியும் என்பது வேறுவிஷயம். ஆனால் இதை செய்து வைத்து அடுத்த நாள் சாப்பிடுவது என்பது எங்களுக்கெல்லாம் சிறுவயதில் பிடித்தமான ஒன்றாக இருந்தது. இதோ இந்த அரிசி வடையின் ரெசிபி உங்களுக்காக..

தேவையானவை:

புழுங்கல் அரிசி- ஒரு கப்
தயிர் - அரை கப்
துருவிய தேங்காய் - ஒரு கப்
வர மிளகாய் - 3 அல்லது 4
பெருங்காயம் - சிறிது
கடலைப்பருப்பு- 1 ஸ்பூன் (ஊறவைத்தது)
கறிவேப்பிலை - சிறிது
உப்பு-  தேவைக்கு
எண்ணெய்- தேவையான அளவு. 

செய்முறை:

முதல் நாள் இரவே புழுங்கல் அரிசியை நன்றாக கழுவி இரவே தயிர்  சேர்ந்த நீரில் 8 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். காலையில் ஊறிய அரிசியுடன் முதலில் வரமிளகாய் போட்டு நன்றாக அரைத்து அதனுடன் தேங்காய்  உப்பு பெருங்காயம் போன்றவற்றையும் போட்டு நைசாக அரைக்கவேண்டும். அரைக்கும்போது அரிசி ஊறவைத்த அந்த மோர் தண்ணீரையே  ஊற்றி அரைக்கலாம்.

இதையும் படியுங்கள்:
திணையில் மணக்கும் தேங்காய்ப்பால் உப்புமா & காளான் புலாவ்!
Tasty vadai recipe

அரிசிமாவு கலவை வெண்ணெய் பதத்துக்கு நன்கு நைசாக இருக்க வேண்டுவது முக்கியம். சற்று கெட்டியான பதத்தில் மாவை எடுத்து அதில் ஊற வைத்த கடலைப்பருப்பு மற்றும் பொடியாக அரிந்த கருவேப்பிலையைப் போட்டுக் கலக்கவும். பின் கையில் அல்லது வெற்றிலையில் எண்ணெய் தடவி மெலிதான வடைகளாக தட்டி நன்கு காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.

அரிசி வடை ரெடி. இதை சூடாக சாப்பிடும்போது கடலைப்பருப்பு கறிவேப்பிலை கடிபட தயிரின் லேசான புளிப்புடன்  ஓரளவு மெதுவாக இருக்கும். ஆறிய பின் சற்று கடினமாக இருந்தாலும் இதன் ருசி அபாரமாக இருக்கும்.

இந்த வடையை செய்து வீட்டில் இருப்பவர்களிடம் தந்து பாருங்கள். இது எதில் செய்தது என்று கேட்பார்கள்.

குறிப்பு - தயிருக்குப் பதிலாக சற்று புளித்த மோரையும் பயன்படுத்தலாம்.

-சேலம் சுபா

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com