திணையில் மணக்கும் தேங்காய்ப்பால் உப்புமா & காளான் புலாவ்!

small grain foods
Healthy small grain foods
Published on

சிறுதானியங்களை ஒரு நாளைக்கு ஒரு நேரமாவது உட்கொள்வது நல்லது. அவற்றை ஒரே மாதிரியாக சமைத்தால் சலிப்பு தட்டும். கொஞ்சம் வித்தியாசமாக செய்து, சூடாக இருக்கும்போதே சாப்பிடக் கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேங்காய்ப்பால் திணை உப்புமா

தேவையான பொருட்கள்:

திணை அரிசி – 2 கப்

பெரிய வெங்காயம் – 2 No

தக்காளி – 1 No

பச்சை மிளகாய் – 4 No

தேங்காய்ப்பால் – 1 கப்

கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை – சிறிதளவு

திணை அரிசியை சுத்தம் செய்து ஒருமணி நேரம் ஊறவைக்கவும்.

பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கி வைக்கவும். ஊறவைத்த திணை அரிசியை தண்ணீர் வடித்து மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

பொடித்த அரிசியை ஆவியில் வேகவைத்து எடுத்து நன்கு உதிர்த்து வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.

நன்கு வதங்கியதும் உதிர்த்து வைத்துள்ள திணை அரிசியை போட்டு உப்பு சேர்த்து நன்கு லேசாக தண்ணீர் தெளித்து கிளறிவிடவும்.

இறுதியாக தேங்காய்ப்பாலை தெளித்து நன்கு கிளறிவிட்டு, நன்கு வெந்து உப்புமா போல பொலபொலவென்று ஆகும் வரை வைத்து எடுக்கவும். கொத்தமல்லி தழை தூவி வேர்க்கடலை சட்னியுடன் பரிமாறவும்.

இதையும் படியுங்கள்:
சுவையும் ஆரோக்கியமும் தரும் பப்பாளி ஸ்பெஷல் ரெசிபிகள்!
small grain foods

திணை காளான் புலாவ்

தேவையான பொருட்கள்:

திணை அரிசி – 2 கப்

சுத்தம் செய்த காளான் – 1 Pkt

மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா – தேவையான அளவு

தாளிக்க:

கல்பாசி – சிறிது

பிரிஞ்சி இலை – 2 No

அன்னாசி பூ – 2 No

முந்திரி பருப்பு 10 No

நறுக்கிய பெரிய வெங்காயம் 1 கப்

நறுக்கிய தக்காளி 1 கப்

இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்

நெய் – 2 ஸ்பூன்

பச்சை மிளகாய் 4 nos

உப்பு தேவைக்கேற்ப

தேங்காய் எண்ணெய் தேவைக்கேற்ப

அரைக்க வேண்டிய மசாலா

பொருட்கள்:

பட்டை, கிராம்பு, ஏலக்காய்

சோம்பு, கசகச, தேங்காய்த்துருவல்

காளானை சிறிது வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் ஊறவைத்து, பின் தண்ணீரை வடித்து வைக்கவும். திணை அரிசியை கழுவி தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரில் வேகவைத்து கொள்ளவும்.

ஒரு குக்கரில் எண்ணெயுடன் நெய் விட்டு கல்பாசி,பிரிஞ்சி இலை, அன்னாசி பூ முந்திரிப்பருப்பை சேர்த்து பொரிக்கவும்.

பிறகு அரைத்த விழுதை சேர்த்து நன்கு கிளறிவிடவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

இதையும் படியுங்கள்:
அட இது என்ன புது ருசி! பாலக்காடு ஸ்பெஷல் பூரி மசாலா ரகசியம்!
small grain foods

இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிய பின், பொடியாக நறுக்கிய தக்காளி போட்டு நன்கு மசியும் வரை வதக்கவும். அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

இப்போது காளான்களை சேர்த்து மசாலாவுடன் நன்கு கிளறவும். காளான் நன்கு வதங்கியதும் 1/2 கப் தண்ணீர் விட்டு, கொதித்ததும் வேகவைத்த திணை அரிசியை சேர்த்து மெதுவாகக் கிளறவும்.

அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.

புலாவில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி தயிர் பச்சடியுடன் சூடாக பரிமாற மிகவும் சுவையாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com