தென்னங்குருத்து உடலுக்கு குளிர்ச்சியை கொடுத்து சூட்டை குறைக்கும். அத்துடன் வயிற்றுப்புண், நரம்புதளர்ச்சி, சர்க்கரை வியாதி, கர்பப்பை கோளாறு, தைராய்டு பிரச்னை போன்றவற்றை சரி செய்ய உதவுகிறது. அத்தகைய தென்னங்குருத்தில் சுவையான பொரியல் எப்படி செய்வது?
தேவையான பொருள்:
தென்னங்குருத்து-1 கப்.
கடுகு-1/4தேக்கரண்டி.
சீரகம்-1/4 தேக்கரண்டி.
வெள்ளை உளுந்து -1/4 தேக்கரண்டி.
நறுக்கிய பச்சை மிளகாய்-1
கருவேப்பிலை- சிறிதளவு.
பொடியாக நறுக்கிய இஞ்சி-1/4 தேக்கரண்டி.
பொடியாக நறுக்கிய பூண்டு-2.
பொடியாக நறுக்கிய வெங்காயம்-1
மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.
பெருங்காய தூள்- தேவையான அளவு.
உப்பு- தேவையான அளவு.
கொத்தமல்லி -சிறிதளவு.
தேங்காய் துருவல்- தேவையான அளவு.
எண்ணெய்- தேவையான அளவு.
செய்முறை விளக்கம்:
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு அதில் கடுகு ¼ தேக்கரண்டி, வெள்ளை உளுந்து ¼ தேக்கரண்டி, சீரகம் ¼ தேக்கரண்டி சேர்த்து கிண்டவும். பிறகு பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 1,கருவேப்பிலை சிறிதளவு, பொடியாக நறுக்கிய இஞ்சி ¼ தேக்கரண்டி,பொடியாக நறுக்கிய பூண்டு 2 சேர்த்து வதக்கவும். அத்துடன் வெட்டி வைத்திருக்கும் வெங்காயம் 1, உப்பு தேவையான அளவு, மஞ்சள் தூள் ¼ தேக்கரண்டி, பெருங்காய தூள் சிறிதளவு சேர்த்து நன்றாக வதக்கவும்.
இப்போது சிறிதாக வெட்டி வைத்திருக்கும் தென்னங்குருத்தை சேர்த்து சிறிது நேரம் வதக்கி அத்துடன் தேங்காய் துருவல் சேர்த்து கின்டவும். கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும். இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். நீங்களும் ஒருமுறை வீட்டில் செய்து பாருங்கள். குடும்பத்தினர் நலம் காப்போம்.