குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவரும் கமகமக்கும் உருளைக்கிழங்கு பட்டாணி கிரேவி!

ஊறவைத்த பட்டாணி, மசாலா தேங்காய் பேஸ்ட், மணமூட்டும் மசாலா தாளிப்புடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் கிரேவி.
potato-peas-gravy
potato-peas-gravy
Updated on

உருளைக்கிழங்கு பட்டாணி கிரேவி: 

நம் வீடுகளில் அன்றாட செய்யும் உருளைக்கிழங்கு பட்டாணி கிரேவியை காட்டிலும் இது மிகுந்த சுவையுடையதாக இருக்கும். உருளைக்கிழங்கில் உள்ள நார்ச்சத்து மட்டும் பட்டாணியில் உள்ள சத்துக்கள் செரிமானத்தை ஊக்குவித்து மலச்சிக்கலை தடுக்கின்றன. உருளைக்கிழங்கில் உள்ள வைட்டமின்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.

உருளைக்கிழங்கு பட்டாணி குழந்தைகளுக்கு விருப்பமான உணவாக  உள்ளது. இது ரசம் சாதம், பூரி, சப்பாத்தி போன்றவற்றிற்கு சிறந்த காமினேஷன் ஆக இருக்கும். சுவையான கமகமக்கும் உருளைக்கிழங்கு பட்டாணி கிரேவி செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: 

உருளைக்கிழங்கு - 500 கிராம் 

பட்டாணி                - 300 கிராம் 

வெங்காயம்           -  30 கிராம் 

தக்காளி                 -  30 கிராம் 

பச்சை மிளகாய்    -  4 

உப்பு                      - தேவையான அளவு 

வீட்டு மசால் பொடி - தேவையான அளவு

தேங்காய்              - தேவையான அளவு

எண்ணெய்           - தேவையான அளவு

கிராம்பு, சோம்பு, பட்டை ,அண்ணாச்சி பூ, பிரிஞ்சி இலை - தேவையான அளவு

மல்லித்தழை        - தேவையான அளவு

கறிவேப்பிலை     - தேவையான அளவு

செய்முறை :

பட்டாணியை நன்கு கழுவி எட்டு மணிநேரம் ஊறவைக்க வேண்டும். பட்டாணி நன்கு ஊறியவுடன் உருளைக் கிழங்கை நன்கு கழுவி பட்டாணியுடன் சேர்த்து குக்கரில் நான்கு விசில் வைக்கவேண்டும். குக்கரின் பிரஷர் அடங்கியவுடன் உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
அட்டகாசமான சுவையில் பச்சை பட்டாணி புலாவ் செய்து அசத்துங்க!
potato-peas-gravy

ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கிராம்பு, சோம்பு, பட்டை, அண்ணாச்சி பூ, பிரிஞ்சி இலை, கருவேப்பிலை சேர்த்து நன்கு பொரிந்து வந்தவுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கிக் கொள்ளவேண்டும். அதனுடன் பச்சை மிளகாய் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு மையாகும் வரை வதக்கிக்கொள்ள வேண்டும். ஒரு மிக்ஸி ஜாரில் தேவையான அளவு தேங்காய்ச்சில், வெங்காயம் சேர்த்து பேஸ்ட் ஆக அரைத்து நாம் வதைக்கி வைத்திருந்த தக்காளி கலவையில் சேர்த்து வேண்டும். தேவையான அளவு உப்பு, வீட்டு மசால் பொடி சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.

நன்கு எண்ணெய் பிரிந்து வந்தவுடன் பட்டாணி உருளைக்கிழங்கை சேர்த்து தேவையான அளவு நீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவேண்டும். நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வந்தவுடன் இறுதியில் மல்லித்தழை சேர்த்து இறக்கவேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் சுவையான கமகமக்கும் உருளைக்கிழங்கு பட்டாணி கிரேவி தயார். இது ஒரு புதுவிதமான சுமையில் நன்றாக இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com