ஆரோக்கியமான வாழைப்பழ அடை- அவல் மில்க் கீர் செய்யலாம் வாங்க!

Banana fruit adai
Banana fruit adai and aval paal g kheer recipesImage Credits: etd.org.tr
Published on

குழந்தைகளுக்கு ஃபேவரைட்டான வாழைப்பழ அடை மற்றும் அவல் மில்க் கீர் எப்படி செய்வது பார்க்கலாம். இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை தரும். இந்த இரண்டு சிம்பிள் ரெசிபியை எப்படி செய்யறதுன்னு பாக்கலாம் வாங்க.

வாழப்பழ அடை செய்ய தேவையான பொருட்கள்;

வாழைப்பழம்-5

சக்கரை-1கப்.

அரிசி மாவு-1/2 கப்.

கோதுமை மாவு-1 கப்.

துருவிய தேங்காய்-1/4கப்.

உப்பு- தேவையான அளவு.

ஏலக்காய் தூள்-சிறிதளவு.

நெய்- தேவையான அளவு.

வாழப்பழ அடை செய்முறை விளக்கம்;

முதலில் ஒரு பாத்திரத்தில் 5 வாழைப்பழம் எடுத்துக்கொண்டு நன்றாக மசித்து எடுத்து கொள்ளவும். இப்போது அதில் அரிசி ½ கப், மைதா 1 கப், சக்கரை 1 கப், துருவிய தேங்காய் ¼ கப், ஏலக்காய் பொடி சிறிதளவு, உப்பு சிறிதளவு சேர்த்து தண்ணீர் விடாமல் நன்றாக பிசைந்து எடுத்து கொள்ளவும்.

இப்போது ஒரு வாழையிலையில் சிறிது நெய் விட்டு தடவிக்கொண்டு பிசைந்து வைத்திருக்கும் மாவை சிறிது அதில் வைத்து தட்டி மடித்து வைத்து விடவும்.

இப்போது அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து அதில் மடித்து வைத்திருக்கும் வாழையிலையை நன்றாக 20 நிமிடம் வேக வைத்து எடுக்கவும். இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான வாழைப்பழ அடை தயார். இதை குழந்தைகளுக்கும் கொடுக்கலாம் ஆரோக்கியமானது. நீங்களும் இந்த ரெசிபியை வீட்டில் ஒருமுறை ட்ரை பண்ணிப் பாருங்க.

அவல் மில்க் கீர் செய்ய தேவையான பொருட்கள்:

அவல்-1கப்.

முந்திரி-10

திராட்சை-10

ஜீனி-1கப்.

குங்குமப்பூ-சிறிதளவு.

பால்-1/2 லிட்டர்.

ஊற வைத்த முந்திரி-15

ஏலக்காய்-2

நெய்- தேவையான அளவு.

இதையும் படியுங்கள்:
சுவையான ரோட்டுக்கடை மசாலா பூரி- சர்க்கரைவள்ளிக் கிழங்கு கட்லெட் செய்யலாம் வாங்க!
Banana fruit adai

அவல் மில்க் கீர் செய்முறை விளக்கம்;

முதலில் கடாயில் நெய் ஊற்றிக்கொண்டு அதில் முந்திரி 10,  திராட்சை 10 பொரித்து எடுத்து கொள்ளவும். இப்போது அதே கடாயில் நெய் சிறிது ஊற்றி அவல் 1 கப்பை சேர்த்து வறுத்து எடுக்கவும். இப்போது அடுப்பில் பால் ½ லிட்டர் வைத்து நன்றாக கொதிக்கவிடவும். 15 முந்திரியை ½ மணி நேரம் ஊறவைத்து அதை மிக்ஸியில் சிறிது பால் விட்டு, 2 ஏலக்காய் சேர்த்து நல்ல பேஸ்டாக அரைத்து எடுத்து கொள்ளவும்.

பால் கொதித்து வந்ததும் வறுத்து வைத்த அவலை அதில் சேர்த்து இரண்டு நிமிடம் கொதித்த பிறகு அரைத்து வைத்திருக்கும் முந்திரியை அதில் சேர்த்து கொள்ளவும். இப்போது 1 கப் ஜீனி, குங்குமப்பூ நிறத்திற்காக சிறிதளவு சேர்த்து கிண்டி விட்டு கடைசியாக வறுத்து வைத்த முந்திரி, திராட்சையை போட்டு இறக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான அவல் மில்க் கீர் தயார். நீங்களும் ஒருமுறை இந்த ரெசிபியை டிரை பண்ணிப் பாருங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com