சுவையில் அள்ளும் அவல்கேசரி ! ஈஸியா செய்யலாம் தெரியுமா?

சுவையில் அள்ளும் அவல்கேசரி ! ஈஸியா செய்யலாம் தெரியுமா?

தேவையான பொருட்கள் :

அவல் - 250கிராம்,

சர்க்கரை - 250 கிராம்,

நெய் - தேவையான அளவு ,

ஏலக்காய் தூள் - ½ டீஸ்பூன்,

முழு முந்திரி - 20, உலர் திராட்சைகள் - 10,

பாதம் பிஸ்தா தேவையான அளவு ,

கேசரிகலர் - 1 சிட்டிகை,

உப்பு - 1 சிட்டிகை.

செய்முறை :

வாணலியில் சிறிது நெய் விட்டு அவலை 3-4 நிமிடங்கள் குறைந்த மிதமான தீயில் வறுத்து கொள்ளவும்

முழுமையாக ஆறவிடவும். பிறகு இதை மிக்ஸியில் ரவை போல கரகரப்பாக பொடிக்கவும். அவலை நறநறப்பாக இல்லாமல் நைஸாக அரைத்து செய்தால் இது அல்வா போலவே இருக்கும்.

ஒரு கடாயில் 2 tbs நெய்யை சூடாக்கி முந்திரியை சேர்க்கவும். பொன் நிறம் வரும்வரை வறுக்கவும். அதனுடன் உலர் திராட்சைகள் சேர்த்து பொன்னிறமாகும் வரை தொடர்ந்து வறுக்கவும் .

அதே நெய்யில் அரைத்த அவலை சேர்த்து 2 - 3 நிமிடம் வறுக்கவும். வறுத்த அவலில் 1 கப் சூடான நீரை ஊற்றி கட்டிகள் இல்லாமல் கிளறி பின்பு 2 tbs நெய் சேர்த்து அடுப்பை குறைந்த தீயில் வைத்து தொடர்ந்து கிளறவும்.

இந்தக் கலவை கெட்டியாகி அவல் முழுவதுமாக வேகும் போது உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

இதனுடன் குங்கும பூவை சேர்த்தால் கூடுதல் சுவை கிடைக்கும்.

இப்போது சர்க்கரை, ஏலக்காய் தூள் மற்றும் கேசரி கலர் சேர்த்து தொடர்ந்து கிளறி, சுமார் 5-8 நிமிடங்கள் அல்லது கடாய் ஓரத்தில் ஒட்டாமல் அல்வா பதத்தில் திரண்டு வந்ததும் வறுத்த முந்திரி & திராட்சை 1tbs நெய் சேர்த்து, நன்கு கலக்கவும் .

இதன் மேலே பாதம் பிஸ்தாவை லேசாக நறுக்கி தூவினால் அவல் கேசரி தயார்.

இந்த அவல்கேசரியை சூடாகப் பரிமாறனாலும் சுவை அள்ளும் . இதை ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாகவும் பரிமாறனாலும் அல்டிமேட்டாக இருக்கும்.

இதை மிக சுலபமாக எளிமையாக தயாரித்து விடலாம். ஆனால் சாப்பிட மிகவும் ரிச்சாகவும் சுவைத் தூக்கலாகவும் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com