Aval Poha Recipe.
Aval Poha Recipe.

Aval Poha Recipe: அட்டகாசமான 'அவல் போகா’ ரெசிப்பி!

நம்ம ஊரில் எப்படி உப்புமா பிரபலமோ அதேபோல வடஇந்தியாவில் ‘அவல் போகா’ மிகவும் பிரபலமாகும். இது சுலபமாக சட்டுன்னு செய்து விட கூடிய ரெசிப்பி. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சத்துள்ள உணவாகும். போகா மிகவும் லேசான உணவு, அதனால் இதை உண்பதால் செரிமானம் எளிதாகிறது. இதை உண்டால் நீண்டநேரம் பசியில்லாமல் பார்த்துக்கொள்ளும்.

அவல் சாப்பிடுவதால் உடலில் உள்ள சூடு தணிந்து உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது. இதனால் அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்க முடியும். நீரிழிவு நோயாளிகள் பசி எடுக்கும் போது அவலை சிறிது எடுத்து மென்று சாப்பிடுவது பசியை போக்கும். சரி வாங்க, இந்த அவல் போகாவை சுலபமாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.

அவல் போகா செய்ய தேவையான பொருள்:

  • அவல்-2 கப்.

  • கடுகு-1/2 தேக்கரண்டி.

  • சீரகம்-1/2 தேக்கரண்டி.

  • கருவேப்பிலை-சிறிதளவு.

  • வெங்காயம்-1

  • பச்சை மிளகாய்-1

  • உருளை-1

  • மஞ்சள் தூள்-1 சிட்டிகை.

  • சக்கரை-1 சிட்டிகை.

  • உப்பு- தேவையான அளவு.

  • வேர்க்கடலை- சிறிதளவு.

  • எழுமிச்சை சாறு- சிறிதளவு.

  • கொத்தமல்லி-சிறிதளவு.

  • எண்ணெய்- தேவையான அளவு.

அவல் போகா செய்முறை விளக்கம்:

முதலில் 2 கப் அவலில் தண்ணீர் ஊற்றி அதை 20 விநாடி ஊற வைத்து வடிகட்டி எடுக்கவும். அதிக நேரம் அவலை ஊற வைக்க கூடாது.

இப்போது ஒரு கடாயில் எண்ணெய் 2 தேக்கரண்டி ஊற்றிக்கொள்ளவும். அதில் முதலில் கடுகு ½ தேக்கரண்டி, சீரகம் ½ தேக்கரண்டி,கருவேப்பிலை சிறிதளவு போட்டு தாளிக்கவும்.

இத்துடன் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் 1, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 1, வேக வைத்த 1 உருளையை சின்னதாக வெட்டி சேர்த்துக்கொள்ளவும். மஞ்சள் தூள் 1 சிட்டிகை, உப்பு தேவையான அளவு சேர்த்து நன்றாக வதக்கவும்.

இதையும் படியுங்கள்:
சாகச சுற்றுலா போக ஆசையா? தமிழ்நாட்டில் இந்த இடங்களை மிஸ் பண்ணிடாதீங்க!
Aval Poha Recipe.

பிறகு அதில் 1 சிட்டிகை சக்கரை சேர்க்கவும். இத்துடன் கடைசியாக ஊற வைத்த அவலை சேர்த்து கிண்டவும். இதில் கிண்டும் போதே அவலும் வெந்துவிடும். கடைசியாக நெய்யில் பொன்னிறமாக பொரித்த வேர்க்கடலை சிறிது, எழுமிச்சை சாறு சிறிதளவு, கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து கிண்டி இறக்கவும்.  அவ்வளவு தான். சிம்பிளான அவல் போகா தயார். நீங்களும் வீட்டில் ஒருமுறை முயற்சித்து பார்த்துவிட்டு சொல்லுங்க.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com