
எந்தவித சுண்டல் செய்தாலும் ஆம்ச்சூர் பொடி தூவி, கேரட், பனீர் துருவி சேர்த்து சுவைக்க ருசி அதிகரிக்கும்.
மொச்சை, பட்டாணி போன்றவற்றை வேகவைக்கும்போது பிரண்டையை சுத்தம் செய்து சேர்த்து வேகவிடவும். பின் தாளித்து இறக்கும்போது சுக்கு அல்லது பெருங்காயம் தாராளமாக சேர்த்து இறக்க வாயு பிடிப்பு வராது.
எந்தவித வடைக்கு ஊறவைக்கும்போது ஒரே பருப்பில் செய்யாமல் 2,3 பருப்பு சேர்த்து செய்ய சுவையோடு, சத்தும் சேரும்.
சர்க்கரை பொங்கல், பாயஸம் போன்ற எந்தவித இனிப்பு செய்யும் போது ஏலக்காய்த்தூள், கிராம்பு 1, ஜாதிக்காய் கொஞ்சம் சேர்த்து பொடித்து சேர்க்க வாசனையாக சுவை அதிகரிக்கும்.
கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, உ பருப்பை ஊற வைக்கும்போது உப்பு சேர்த்து ஊறவிட்டு பின் வேகவைக்க உப்பு பருப்பில் சேர்ந்து சுவையாக இருக்கும்.
புளியோதரை செய்யும்போது புளிக்காய்ச்சல் செய்து சாதத்துடன் சேர்க்கும்போது வறுத்த புளிக் காய்ச்சல் பொடியையும் தூவி கிளறி இறக்க சுவையாக இருக்கும்.
தேங்காய் சாதம் தயாரிக்கும்போது தேங்காயுடன் மு பருப்பு, வறுத்த கடலை, ஊறவைத்த கொண்டைக்கடலை சேர்த்து கிளறி பரிமாற சுவையாக இருக்கும்.
சிப்ஸ், வற்றல் அப்பளம் நமக்குப் போகாமல் இருக்க டப்பாவில் அப்படியே வைக்காமல் கவரில் போட்டு வைக்க க்ரிஸ்பாகவே இருக்கும்.
மோதகம், பிடி கொழுக்கட்டை செய்யும்போது, மாவுடன் சிறுதானிய மாவு சேர்த்து செய்ய சுவையோடு சத்தும் சேரும்.
புளிக்குழம்பு, வற்றல் குழம்பு செய்யும்போது வற்றல் களை பொரித்து கடைசியாக போட நன்றாக இருக்கும்.
கூட்டு, குருமா செய்கையில் தேங்காய் அதிகம் சேர்ப்பதை குறைத்துக் கொண்டு, பொட்டுக்கடலை, கசகசா அரைத்த தை சேர்த்து, காய்கறியோ, கிழங்கோ வெந்ததை மசித்து கலந்து விட நன்றாக கெட்டிப்படும். ருசியும் அதிகரிக்கும்.
சூப் செய்கையில் தக்காளியை வேகவிட்டு அரைத்து சேர்த்து பின் காயோ, காளானோ சேர்க்க சூப் நிறமாக கெட்டியாக இருக்கும். சுவை அதிகரிக்கும்.
தனியாக பழங்களை சாப்பிடாத குழந்தைகளுக்கு பள்ளிக்கு தயிர் சாதத்தில் மாதுளை முத்துக்கள், வாழைப்பழ ரோல், ஆப்பிள் டிரை நட்ஸ் சேர்த்து சாலட் என கொடுக்க விரும்பி சாப்பிடுவர்.