
இன்றைக்கு சுவையான மற்றும் ஆரோக்கியமான வெள்ளரிக்காய் ரைஸ் மற்றும் முருங்கைப்பொடி உருளை வறுவல் ரெசிபியை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
வெள்ளரிக்காய் ரைஸ் செய்ய தேவையான பொருட்கள்.
வெள்ளரிக்காய்-2
கொத்தமல்லி-1 கைப்பிடி
பாஸ்மதி அரிசி-1கப்
மிளகு-1 தேக்கரண்டி
சீரகம்-1 தேக்கரண்டி
இஞ்சி-1 துண்டு
பச்சை மிளகாய்-2
நெய்-1 தேக்கரண்டி
வெந்தயம்-1 தேக்கரண்டி
வெங்காயம்-1
உப்பு-தேவையான அளவு
வெள்ளரிக்காய் ரைஸ் செய்முறை விளக்கம்.
முதலில் மிக்ஸியில் 2 வெள்ளரிக்காயை தோலை சீவி விட்டு சேர்த்துக் கொள்ளவும். இத்துடன் 1 கைப்பிடி கொத்தமல்லியை சேர்த்து நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
இப்போது கடாயில் 1 கப் பாஸ்மதி அரிசியை 4 மணி நேரம் ஊற வைத்து சேர்த்துக் கொள்ளவும். இதில் மிளகு 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, இஞ்சி 1 துண்டு பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். நறுக்கிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, ஊற வைத்த வெந்தயம் 1 தேக்கரண்டி, நெய் 1 தேக்கரண்டி சேர்த்து அரைத்து வைத்திருக்கும் விழுதை சேர்த்துவிட்டு 1 கப் தண்ணீர் சேர்த்து விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
இப்போது இதை மூடிப்போட்டு 15 நிமிடம் வேகவைத்து எடுத்தால் சுவையான வெள்ளரி ரைஸ் தயார்.
இந்த சிம்பிள் ரெசிபியை நீங்களும் வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
முருங்கைப்பொடி உருளை வறுவல் செய்ய தேவையான பொருட்கள்.
முருங்கைக்கீரை-2 கப்
உளுந்து-1 தேக்கரண்டி
பாசிப்பருப்பு-1 கப்
வெள்ளை எள்-1 தேக்கரண்டி
சீரகம்-1 தேக்கரண்டி
வரமிளகாய்-2
தாளிக்க,
எண்ணெய்-1 தேக்கரண்டி
கடுகு-1 தேக்கரண்டி
உளுந்து-1 தேக்கரண்டி
கருவேப்பிலை-சிறிதளவு
உருளை-2
பூண்டு-5
உப்பு-தேவையான அளவு
முருங்கைப்பொடி உருளை வறுவல் செய்முறை விளக்கம்.
முதலில் கடாயில் முருங்கைக்கீரை 2 கப்பை நன்றாக வறத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இப்போது கடாயில் உளுந்து 1 தேக்கரண்டி, பாசிப்பருப்பு 1 தேக்கரண்டி, வெள்ளை எள் 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, வரமிளகாய் 2 சேர்த்து வறுத்து மிக்ஸியில் சேர்த்து அத்துடன் வறுத்து வைத்திருக்கும் முருங்கைக்கீரையை சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இப்போது கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு 1 தேக்கரண்டி கடுகு, உளுந்து 1 தேக்கரண்டி, கருவேப்பிலை சிறிதளவு, இடித்த பூண்டு 5, வேகவைத்த உருளைக்கிழங்கு 2 ஐ சின்ன சின்னதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். இத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வறுத்த பிறகு கடைசியாக முருங்கைப்பொடியை அதில் சேர்த்து கலந்துவிடவும். அடுப்பை குறைவான சூட்டில் வைத்து நன்றாக வறுத்து எடுத்தால் மொறு மொறு முருங்கைப் பொடி உருளை வறுவல் தயார்.
நீங்களும் இந்த சுவையான ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.