பாதாம் பிசின் பாயசம்: கோடைக்கு இதமான ஆரோக்கியமான இனிப்பு!

உடலுக்குக் குளிர்ச்சி தரும் பாதாம் பிசின் பாயசத்தை வீட்டிலேயே எளிதாகச் செய்வது எப்படி?
பாதாம் பிசின்
பாதாம் பிசின்AI image
Updated on

வீன உலகில் அறிவியல் வளர்ச்சி அடைவதைப் போலவே நாவிற்கு விருந்தளிக்கும் உணவு வகைகளிலும் பல வகைகள் புதிது புதிதாக வளர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. அந்த வகையில் பாயசம் என்றாலே ஜவ்வரிசி பாயாசம், பாசிப்பருப்பு பாயசம் இதுபோல்தான் நாம் சமைத்து வந்துள்ளோம்.

இன்று அதற்கு மாற்றாக ஒரு புதுவிதமான சுவையில் பாதாம் பிசினைக் கொண்டு பாதாம் பிசின் பாயசம் செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம். மேலும் கோடை காலத்தில் பாதாம் பிசின் உடல் சூட்டை தணிப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.

தேவையான பொருட்கள்:

பசும்பால் - 1 லிட்டர்

பாதாம் பருப்பு - 20

பாதாம் பிசின் - 10 கிராம்

முந்திரி - 50 கிராம்

உலர் திராட்சை - 50 கிராம்

ஜவ்வரிசி - 100 கிராம்

சேமியா - 100 கிராம்

நாட்டு சர்க்கரை - 200 கிராம்

நெய் - தேவையான அளவு

ஏலக்காய் பொடி - தேவையான அளவு

பாதாம் பிசின் சேர்த்த பாயசம் தயாரிக்கும் முறை:

10 கிராம் பாதாம் பிசினை நீரில் 8 மணி நேரம் ஊறவைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பாதாம் பருப்பை 8 மணி நேரம் நன்கு ஊறவைத்து தோல் உரித்து மிக்ஸி ஜாரில் சேர்த்து மென்மையாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பாதாம் பிசின்
பாதாம் பிசின்AI image

வாணலியில் தேவையான அளவு நெய் ஊற்றி 100 கிராம் ஜவ்வரிசியை சேர்த்து ஐந்து நிமிடங்கள் மிதமான வெப்பத்தில் வறுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் 100 கிராம் சேமியா சேர்த்து நன்கு மனம் வரும் வரை வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

அதே வாணலையில் ஒரு லிட்டர் பசும்பால் சேர்த்து நன்கு பசும்பால் கொதித்து வந்தவுடன் நாம் வறுத்து வைத்திருந்த ஜவ்வரிசி, சேமியா கலவையை சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிட வேண்டும். இதனுடன் நாம் அறைத்து வைத்திருந்த பாதாம் பருப்பு கலவையை சேர்த்து மிதமான வெப்பத்தில் கிளறி கொடுக்க வேண்டும். பாயாசத்திற்கான பாகு தயார் செய்வதற்காக வாணலையில் தேவையான அளவு நாட்டு சர்க்கரை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாகாக கரைத்துக் கொள்ள வேண்டும்.

இதனை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பாயாசத்திற்கான பசும்பால், ஜவ்வரிசி, சேமியா, பாதாம் பருப்பு கலவை நன்கு கெட்டியாக வந்தவுடன் நாம் ஊறவைத்து தனியாக எடுத்து வைத்திருந்த பாதாம் பிசின் கலவையும், பாகாக கரைத்து வைத்திருந்த நாட்டு சர்க்கரையும் சேர்த்து நன்கு கிளறி கொடுக்க வேண்டும். வாணலையில் தேவையான அளவு நெய் ஊற்றி முந்திரி நன்கு சிவந்து வரும் வரையும், உலர் திராட்சை நன்கு உப்பி வரும் வரை வதக்கிக்கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
விசேஷ தின ஸ்பெஷல்: நாவில் கரையும் மூங்தால் பணியாரம் & கோதுமை புட்டு!
பாதாம் பிசின்

இதனை நாம் தயார் செய்து வைத்திருந்த பாதாம் பிசின் பாயாசத்துடன் சேர்த்து தேவையான அளவு ஏலக்காய் பொடி மற்றும் நெய் ஊற்றி கிளறி கொடுக்க வேண்டும். சுவையான கமகமக்கும் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடிய புதுவிதமான பாதாம் பிசின் பாயசம் தயார்.

இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பமான இனிப்பு வகையாக இருக்கும். விசேஷ காலங்களில் அன்றாட செய்யும் இனிப்பு வகைகளை தவிர்த்து இவ்வாறு புதுவிதமாக செய்து கொடுப்பதன் மூலம் அதை அனைவரும் விரும்பி உண்பார்கள்.

இதையும் படியுங்கள்:
நீங்க ஊத்துற எண்ணெய் உங்க சாப்பாட்டை என்ன பண்ணுது தெரியுமா?
பாதாம் பிசின்

இந்த ஆரோக்கியமான இனிப்பை வீட்டிலேயே தயாரிப்பதன் மூலம், கடைகளில் விற்கப்படும் ரசாயனங்கள் கலந்த இனிப்புகளுக்கு மாற்றாக, உங்கள் குடும்பத்திற்குத் தேவையான இயற்கை குளிர்ச்சியையும், புத்துணர்ச்சியையும் வழங்கி கோடைக்கால உடல் உபாதைகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்க முடியும்.

logo
Kalki Online
kalkionline.com