-பி.ஆர்.லட்சுமி
ஒரு வாழைப்பூவை நன்கு பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் உரித்த வெங்காயம் ஒரு கப், கேரட் துருவல் ஒரு கப், பூண்டு உரித்தது 5 இஞ்சி துருவியது கால் ஸ்பூன் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பாசிப்பருப்பை நன்கு பெரும் மாணவியில் அரைக்கப் எடுத்து வறுத்து விட வேண்டும் அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி உரித்த வெங்காயம், கேரட் துருவல் பீட்ருட், முள்ளங்கி துருவல் ஒரு கப் பூண்டு5, இஞ்சி இவற்றை போட்டு மூடி போட்டு குக்கரில் வைக்க வேண்டும். இரண்டு விசில் சத்தம் வந்தவுடன் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
வாழைப்பூவைத் தனியாக இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவைக்க வேண்டும். பின்னர் கல் உரலிலோ அல்லது மிக்ஸிலோ நன்கு அரைத்து எடுக்க வேண்டும். அரைத்து எடுத்த பின, பாசிப்பருப்பு கூட்டுடன் கலந்துவிட வேண்டும். தாளிக்க சிறிதளவு எண்ணெய் விட்டு சீரகம், உளுந்து மூன்று மிளகாய் வத்தல், பெருங்காயம் சிறிதளவு போட்டு நன்கு சிவக்க எடுத்து பாசிப்பருப்பு கூட்டுடன், உப்பு கலந்து விடவேண்டும். விருப்பப்பட்டவர்கள் தேங்காய் துருவல், மாங்காய் துருவல், முந்திரி துருவல் சேர்த்துக் கொள்ளலாம். இது இட்லி, சப்பாத்தி, பூரி போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம்.
மலாக்காய் வாழைப்பூ ரொட்டி வடை
மலாக்காய் என்பது வேர்கடலை. ஒரு வாழைப்பூவை நன்கு ஆய்ந்து வைத்துக் கொள்ளவேண்டும். ஒரு கப் உரித்த வெங்காயம், அரை ஸ்பூன் பெருங்காயம், ஓமம் சிறிதளவு, உப்பு, சிறிதளவு, சோம்பு, அரை கப் வறுத்த வேர்கடலை (மலாக்காய்) சேர்த்து பிசைந்து அரை குறையாக மிக்சியில் அரைத்து வைத்துக் கொள்ளவேண்டும். வாழைப்பூவை வேகவைத்த பின் மிக்சியில் அரைத்து வைத்துள்ள விழுதுடன் நைசாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும். ரொட்டி துண்டுகளை நன்கு பிசைந்து அதனுடன் கொதிக்கின்ற எண்ணெயில் பொரித்தெடுத்தால் சுவையான வடை தயாராகிவிடும்.