
இன்றைக்கு சுவையான வாழைத்தண்டு சூப் மற்றும் மாதுளை பொரியல் ரெசிபிஸை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யலாம்னு பார்ப்போம்.
வாழைத்தண்டு சூப் செய்ய தேவையான பொருட்கள்.
வாழைத்தண்டு-1
எண்ணெய்-தேவையான அளவு.
பட்டை-1
லவங்கம்-1
ஏலக்காய்-2
தனியா-1 தேக்கரண்டி.
மிளகு-1 தேக்கரண்டி.
கருவேப்பிலை-சிறிதளவு.
இஞ்சி-1 துண்டு.
பச்சை மிளகாய்-2
பூண்டு-4
வெங்காயம்-2
தக்காளி-1
மஞ்சள் தூள்-சிறிதளவு.
உப்பு-தேவையான அளவு.
கொத்தமல்லி தண்டு-சிறிதளவு.
சிறுபருப்பு-1 கப்.
பெப்பர்-சிறிதளவு.
எழுமிச்சை சாறு- சிறிதளவு.
வாழைத்தண்டு சூப் செய்முறை விளக்கம்:
முதலில் வாழைத்தண்டை தோல் சீவி சிறிதாக நறுக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும். இப்போது கடாயில் எண்ணெய் சிறிது சேர்த்துவிட்டு பட்டை 1, லவங்கம் 1, ஏலக்காய் 2, தனியா 1 தேக்கரண்டி, மிளகு 1 தேக்கரண்டி, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து இடித்து வைத்த இஞ்சி 1 துண்டு, பூண்டு 4, பச்சை மிளகாய் 2 சேர்த்து விட்டு நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் 2, தக்காளி 1 சேர்த்து நன்றாக வதக்கவும்.
இப்போது நறுக்கி வைத்திருக்கும் வாழைத்தண்டை சேர்த்து மஞ்சள்தூள் சிறிதளவு, உப்பு தேவையான அளவு சேர்த்து வதக்கிவிட்டு தண்ணீர் ஊற்றிக்கொள்ளவும். இதில் கொத்தமல்லி தண்டு சிறிதளவு, சிறுபருப்பு 1 கப் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். பிறகு சூப்பை மட்டும் வடிகட்டி எடுத்துவிட்டு அதில் எழுமிச்சை சாறு சிறிதளவு, பெப்பர் சிறிதளவு தூவி பறிமாறவும். சூவையான மற்றும் ஆரோக்கியமான வாழைத்தண்டு சூப் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
மாதுளை பொரியல் செய்ய தேவையான பொருட்கள்:
எண்ணெய்- தேவையான அளவு.
கடுகு-1 தேக்கரண்டி.
உளுந்து-1 தேக்கரண்டி.
பச்சை மிளகாய்-2.
மாதுளை-1 கப்.
உப்பு-தேவையான அளவு.
தேங்காய் துருவல்-1 கப்.
மாதுளை பொரியல் செய்முறை விளக்கம்:
முதலில் கடாயில் எண்ணெய் சிறிது ஊற்றி அதில் கடுகு 1 தேக்கரண்டி, உளுந்து 1 தேக்கரண்டி, பச்சை மிளகாய் 2, சிறிதாக நறுக்கிய வெங்காயம் 1 சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு மாதுளை 1 கப், உப்பு தேவையான அளவு சேர்த்து தேங்காய் துருவல் 1 கப் சேர்த்து நன்றாக கலந்துவிடவும். அவ்வளவுதான். சுவையான மாதுளை பொரியல் தயார். இந்த ரெசிபியை நீங்களும் வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.