
இன்றைக்கு சுவையான கேரட் கேக் மற்றும் முட்டை கீர் ரெசிபியை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
கேரட் கேக் செய்ய தேவையான பொருட்கள்.
பால்-1/2 லிட்டர்.
தயிர்-2 தேக்கரண்டி.
சன்பிளவர் ஆயில்-75 ml.
வெண்ணிலா எசென்ஸ்-1 தேக்கரண்டி.
நாட்டுச்சர்க்கரை-1 கப்.
கோதுமை மாவு-1 ½ கப்.
உப்பு-1 சிட்டிகை.
பேக்கிங் சோடா-1/2 தேக்கரண்டி.
பேக்கிங் பவுடர்-1 தேக்கரண்டி.
சுக்குத்தூள்-1/2 தேக்கரண்டி.
பட்டைத்தூள்-1 தேக்கரண்டி.
வால்நட்-1 கைப்பிடி.
உலர்ந்த திராட்சை-10.
எழுமிச்சை தோல்-சிறிதளவு.
கேரட்-2.
வெண்ணெய்-சிறிதளவு.
கேரட் கேக் செய்முறை விளக்கம்.
முதலில் ஒரு பவுலில் ½ லிட்டர் பால், 2 தேக்கரண்டி தயிர், 75ml சன்பிளவர் ஆயில், 1 தேக்கரண்டி வெண்ணிலா எசென்ஸ், 1 கப் நாட்டுச்சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ளவும்.
1 ½ கப் கோதுமை மாவு, 1 சிட்டிகை உப்பு, 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர், ½ தேக்கரண்டி பேக்கிங் சோடா, ½ தேக்கரண்டி சுக்குத்தூள், 1 தேக்கரண்டி பட்டைத்தூள் சேர்த்து கலந்து சலித்து எடுத்துக்கொள்ளவும்.
இப்போது இதை கலந்து வைத்திருக்கும் கலவையுடன் சேர்த்து நன்றாக கட்டியில்லாமல் கலந்துவிட்டுக் கொள்ளவும். இதில் 1 கைப்பிடி வால்நட், உலர்ந்த திராட்சை 10, சீவிய எழுமிச்சை தோல் சிறிதளவு. இத்துடன் துருவி வைத்திருக்கும் கேரட் 2 சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ளவும்.
ஓவனை பத்து நிமிடம் பிரீ ஹீட் செய்துக்கொள்ளவும். கேக் டின்னில் வெண்ணெய்யை தடவிய பிறகு கலந்து வைத்திருக்கும் மாவை சேர்த்து ஓவனில் 180 டிகிரி செல்சியஸில் 30 நிமிடம் வைத்து எடுக்கவும். சுவையான கேரட் கேக் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
முட்டை கீர் செய்ய தேவையான பொருட்கள்;
நெய்-2 தேக்கரண்டி.
பாதாம்-10
பாஸ்தா-10
முந்திரி-10
திராட்சை-10
பால்-3/4 லிட்டர்.
பால் பவுடர்-4 தேக்கரண்டி.
சர்க்கரை-1/2 கப்.
வேகவைத்த முட்டை வெள்ளைக்கரு-2
வெள்ளைக்கரு முட்டை-2
ஏலக்காய் பொடி-1 தேக்கரண்டி.
குங்குமப்பூ-1 சிட்டிகை.
ரோஸ் வாட்டர்-1 தேக்கரண்டி.
முட்டை கீர் செய்முறை விளக்கம்;
முதலில் கடாயில் 2 தேக்கரண்டி நெய் விட்டு நறுக்கிய பாதாம் 10, பிஸ்தா 10, முந்திரி 10, திராட்சை 10 சேர்த்து வறுத்துவிட்டு இத்துடன் காய்ச்சிய பால் ¾ லிட்டர் சேர்த்துக்கொள்ளவும். இப்போது இதில் ஒரு கொதி வந்ததும், 4 தேக்கரண்டி பால் பவுடரை பாலில் கரைத்து சேர்த்துக்கொள்ளவும். இதற்கு ½ கப் சர்க்கரையை சேர்த்துக்கொள்ளவும்.
இப்போது வேகவைத்த முட்டையில் இருக்கும் வெள்ளை கருவை நன்றாக துருவி இதில் சேர்த்துக்கொள்ளவும். இது பார்ப்பதற்கு சேமியா போல இருக்கும். இப்போது முட்டையுடைய வெள்ளை கருவை உள்ளே சேர்த்துக் கொள்ளவும். வாசனைக்காக ஏலக்காய் பவுடர் 1 தேக்கரண்டி, குங்குமப்பூ 1 சிட்டிகை, ரோஸ் வாட்டர் 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக கலந்துவிட்டு அடுப்பில் சிம்மில் 10 நிமிடம் வைத்து பிறகு பரிமாறவும். சுவையான முட்டை கீர் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.