1.கோதுமை மாவு - 2 கப்
2.ஓமம் - 1/4 டீஸ்பூன்
3.சீரகம் - 1/4 டீஸ்பூன்
4.புதினா,மல்லி இலை - 2 டீஸ்பூன்
5.நெய் - 1 டீஸ்பூன்
6.உப்பு - தேவையான அளவு
7.பீட்ரூட் - 1 சிறியது
8.எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
1.பீட்ரூட்டை சுத்தம் செய்து சிறியதாக நறுக்கி நன்கு விழுதாக அரைத்து கொள்ளவும்.
2.கோதுமை மாவி்ல் உப்பு ,ஓமம், சீரகம் ,நெய் நறுக்கிய புதினா,மல்லி இலைகள் சேர்த்து நன்கு பிரட்டி கொள்ளவும்.
3. பின்னர் பீட்ரூட் விழுது சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். தண்ணீர் தேவைப்பட்டால் சேர்த்து மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.
4. 1 மணிநேரத்திற்கு பின்னர் மெல்லிய சப்பாத்திகளாக தேய்த்து சப்பாத்திகளாக சுட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.