பெங்காலி புகழ் மிஹிதானா.. எளிதான முறையில் சமைத்து சாப்பிடலாம் வாங்க!

Mihidana
MihidanaImge credit: Saradamoni Mistanna Bhandar

சரியாக ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் புர்ட்வான் ( Burdwan) என்ற ராஜ்யத்தைப் பார்க்க வந்த ஆங்கிலேயர் குர்ஜானுக்காக ( Gurzon) புதிதாக செய்யப்பட்ட இனிப்புத்தான் மிஹிதானா. அதன்பின்னர் இன்று வரை அதனுடைய சுவையால் பெங்காலி மக்களை ஈர்த்து வருகிறது இந்த மிஹிதானா இனிப்பு பண்டம். அந்தவகையில் இதனை எப்படி செய்வது என்பதைப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

1.  ஒரு கப் அளவு பிசின் ( பெங்காலி பருப்பு மாவு)

( பிசின் மாவு இல்லையென்றால் கடலை மாவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.)

2.  ஒரு தேக்கரண்டி அளவு நெய்

3.  தேவையான அளவு தண்ணீர் ( மாவு பிசைய)

4.  1 கப் அளவு சர்க்கரை

5.  ½ கப் அளவு தண்ணீர் ( தனியாக பாகு-க்கு)

6.  முந்திரி, திராட்சை

முதலில் மாவு தயார் செய்யவும்:

ஒரு பாத்திரத்தில் நெய் மற்றும் மாவை சேர்க்கவும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நீர் சேர்த்து நன்றாகப் பிசையவும். கையில் மாவு ஒட்டாத அளவிற்கு தண்ணீர் சேர்த்து மென்மையாக கலக்கவும். கட்டிகள் வராத அளவிற்கு நன்றாக கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். இப்போது அதை தனியாக ஒதுக்கி வைத்துவிட வேண்டும்.

பாகு தயார் செய்ய வேண்டும்:

ஒரு தனிப் பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து பாகு தயார் செய்ய வேண்டும். மிதமான சூட்டில் பாகு தயாரித்தால்தான் பாத்திரம் அடிப்பிடிக்காமல் இருக்கும். இரு விரலில் எடுத்து பிரித்துப் பார்த்தால் நூல் மாதிரி பிரிய வேண்டும். அதாவது கொஞ்சம் ஒட்டும் அளவிற்கு கெட்டியாக பாகு தயார் செய்துக்கொள்ள வேண்டும்.

வறுக்கவும்:

சற்று அகலமான கடாயில் நெய் அல்லது எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். இப்போது கலக்கி வைத்த மாவை எடுத்து துளை உள்ள கரண்டியின் மேல் மெதுவாக ஊற்றவும். இதனால் எண்ணெயில் சிறிய சிறிய துளியாய் மாவு விழும். மிதமான சூட்டில் பொன்னிறமாகும் வரை அதனை வறுக்க வேண்டும். அதிக சூட்டில் வறுத்து விடக் கூடாது. ஏனெனில் இதுதான் மிஹிதானா செய்வதற்கு மிகவும் முக்கியம். வறுத்தவுடன் துளை கரண்டிப் பயன்படுத்தி எண்ணெயை வடிக்கட்டிவிட்டு வறுத்த மாவை தனியாக எடுத்து வைக்க வேண்டும்.

ஊறவைக்கவும்:

எண்ணெய் நன்றாக நீங்கியப் பின்னர் வறுத்த மாவை சர்க்கரை பாகில் சேர்த்து சில நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பாகு நன்றாக அதனுடன் கலந்தப்பின்னர் முந்திரி, திராட்சை போன்றவற்றை சேர்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
அருமையான சுவையில் அன்னாசிப்பழ கேசரி!
Mihidana

இப்போது எடுத்து சாப்பிட்டால் ருசியான மிஹிதானா ரெடி!

குறிப்பாக இதனை நீங்கள் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் செய்யலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com