வங்காளத்தின் மிஷ்டி டொய்: மண் சட்டியில் பாரம்பரிய இனிப்பு தயிர் செய்வது எப்படி?

முழு கொழுப்புப் பால், கேரமலாக்கிய சர்க்கரை, கெட்டித் தயிர் சேர்த்து, மண் சட்டியில் ஊற்றி உறை ஊற்றும் முறையில், கோடைக்காலத்துக்கு ஏற்ற மிஷ்டி டொய் தயிரை செய்வதற்கான ரகசியங்கள்.
bengali-mishti-doi
bengali-mishti-doi
கலைமதி சிவகுரு

I am so thankful for kalki in my life. I am graduate from Holy Cross college in Nagercoil in the year 1983.I also tailaring work and make some bags, pouches. My writing were published in mangayarmalar, and Devathai, kudumbamalar with thinathanthi and received some prizes. Now I am writing in kalki publications. Cooking, Writing, reading anmigam books, playing chess are my hobbies.

Updated on

ங்காளத்தின் கலாச்சார அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்வது ‘மிஷ்டி டொய்’ எனப்படும் இந்த இனிப்பு தயிர்.  பாரம்பரியமாக மண் சட்டிகளில் வைத்துத் தயாரிக்கப் படும் இந்தத் தயிர், கோடை காலத்திற்கு இதமானதாகவும், எந்த ஒரு விருந்துக்கும் நிறைவான முடிவாகவும் அமைகிறது. ரசகுல்லாவிற்கு அடுத்தபடியாக அனைவராலும் விரும்பப்படும் இந்த வங்காளத்து அதிசயத்தை, மிகக் குறைந்த பொருட்களைக்கொண்டு நம் வீட்டிலேயே எப்படிச் சுவையாகத் தயாரிக்கலாம்.

மிஷ்டி டொய் (Mishti Doi)    

தேவையான பொருட்கள்:

முழு கொழுப்புள்ள பால் _ 1 லிட்டர்

சர்க்கரை _ ¾ கப்

கெட்டித் தயிர் (உறை ஊற்ற) _ 2 டேபிள் ஸ்பூன்

தண்ணீர் _ 1 டேபிள் ஸ்பூன் (சர்க்கரை பாகு செய்ய)

ஏலக்காய் தூள் _ ஒரு சிட்டிகை

செய்முறை:  ஒரு கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும். பால் பாதியாகக் குறையும் வரை மிதமான தீயில் சுண்டக் காய்ச்ச வேண்டும். பால் ஆடை கட்டாமல் இருக்க அடிக்கடி கிளறிக்கொண்டே இருக்கவும். மிஷ்டி டொய்க்கு அழகான பழுப்பு நிறத்தையும் மணத்தையும் தருவது  கேரமல்தான்.  மற்றொரு சிறிய பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் சூடுபடுத்தவும். சர்க்கரை கரைந்து மெதுவாகப் பழுப்பு நிறமாக மாறும். நல்ல கரும் பழுப்பு நிறம் வந்தவுடன், காய்ச்சி வைத்துள்ள பாலில் இருந்து ஒரு கரண்டி பாலை எடுத்து இந்த கேரமலில் ஊற்றிக் கலக்கவும் (கவனம்:இது பொங்கும்). இப்போது இந்த கேரமல் கலவையை மொத்த பாலிலும் ஊற்றிக் கலக்கவும். பால் இப்போது ஒரு அழகான இளம்பழுப்பு நிறத்திற்கு மாறும். 

இதையும் படியுங்கள்:
சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க 'சில்'லென 3 ஐடியாக்கள்: வீட்டிலேயே அசத்தலாம் வாங்க!
bengali-mishti-doi

பின்னர்  மீதமுள்ள சர்க்கரையை பாலில் சேர்த்து, சர்க்கரை கரையும் வரை ஒரு கொதிவிட்டு அடுப்பை அணைக்கவும். பால் இப்போது இதமான சூட்டிற்கு  வரும்வரை ஆறவிடவும்.

பால் விரல் பொறுக்கும் சூட்டில் இருக்கும்போது, 2 டேபிள் ஸ்பூன் கெட்டித் தயிரை ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாக அடித்துக் கொள்ளவும் (Lumps இல்லாமல் இருக்கவேண்டும்). இந்தத் தயிரை பாலில் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

இந்தக் கலவையை ஒரு மண் சட்டியில் அல்லது கண்ணாடிப் பாத்திரத்தில் ஊற்றவும். (மண் சட்டி பயன்படுத்தினால் அதிகப்படியான ஈரப்பதத்தை அது உறிஞ்சி, தயிரை இன்னும் கெட்டியாக மாற்றும்). பாத்திரத்தை ஒரு தட்டு அல்லது அலுமினியம் ஃபாயில் கொண்டு மூடி, ஒரு சூடான இடத்தில் 8 முதல் 10 மணி நேரம் அப்படியே வைக்கவும்.

தயிர் நன்றாகத் தோய்ந்த பிறகு (Set ஆன பிறகு), அதை 2-3 மணி நேரம் பிரிட்ஜில் (Fridge) வைத்து எடுத்தால் இன்னும் சுவையாகவும், கெட்டியாகவும் இருக்கும்.

சரியான மிஷ்டி டொய் கிடைக்க சில குறிப்புகள்:

1.பால் அதிக சூடாக இருந்தால் தயிர் திரண்டுவிடும், ஆறிப்போயிருந்தால் உறை ஊற்றாது. எனவே வெதுவெதுப்பான சூட்டில்  இருப்பது அவசியம்.

2.உறை ஊற்றப் பயன்படுத்தும் தயிரில் தண்ணீர் இருக்கக்கூடாது. துணியில் வடிகட்டிய தயிரைப் பயன்படுத்துவது மிகச்சிறந்தது.

3.பாரம்பரிய சுவை வேண்டுமானால் மண் சட்டியைப் பயன்படுத்துங்கள், அது தயிரில் இருக்கும் நீரை உறிஞ்சி தயிரை ‘கேக்’ போல மாற்றும்.

logo
Kalki Online
kalkionline.com