சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க 'சில்'லென 3 ஐடியாக்கள்: வீட்டிலேயே அசத்தலாம் வாங்க!

malai-kulfi-recipes
malai-kulfi-recipes
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

கூல் காபி வித் ஐஸ் கிரீம்:

பால் ஒரு கப்

இன்ஸ்டன்ட் காபித்தூள் 2 ஸ்பூன் சர்க்கரை 1 ஸ்பூன்

சாக்லேட் சிரப் அலங்கரிப்பதற்கு

வெண்ணிலா ஐஸ்கிரீம் 2 கப்

ஐஸ் கட்டிகள் 1 ஸ்பூன்

காபித்தூள், பால், சர்க்கரை, ஐஸ்கட்டிகள் ஆகிய அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்கு அடித்துக்கொள்ளவும். பின்பு அதில் சாக்லேட் சிரப் மற்றும் ஐஸ்கிரீம் சேர்த்து குளிரக் குளிர பரிமாறவும்.

கூல் கூல் ஷேக்:

வெண்ணிலா ஐஸ்கிரீம் 4 ஸ்பூன்

இளநீர் வழுக்கை 1/2 கப்

பாதாம் பிசின் 4

குளிர்ந்த பால் 1 கப்

சர்க்கரை 2 ஸ்பூன்

ரோஸ் எசென்ஸ் 1 ஸ்பூன்

பாதாம் பிசினை ஒரு கிண்ணத்தில் போட்டு 2 மணி நேரம் ஊறவிடவும். இளநீர் வழுக்கையை சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும். அத்துடன் பால், சர்க்கரை இரண்டையும் சேர்த்து நன்கு அரைக்கவும். கடைசியாக ரோஸ் எசென்ஸ், 4 ஸ்பூன் வெண்ணிலா ஐஸ்கிரீம் இரண்டையும் சேர்த்து நுரை வரும் வரை அடிக்கவும்.

ஒரு டம்ளரில் முதலில் பாதாம் பிசின் 1 ஸ்பூன் போட்டு அடுத்ததாக அரைத்து வைத்ததை சேர்த்துவிடவும். கடைசியாக டம்ளரின் மேல் பகுதியில் ஒரு பக்கம் பாதாம் பிசின் 1 ஸ்பூன் , மற்றொரு பக்கம் வெண்ணிலா ஐஸ்கிரீம் 1 ஸ்பூன் போட்டு பரிமாற ஆஹா என்ன சுகம்! என்ன ருசி! அருமையான கூல் கூல் ஷேக் தயார்.

மலாய் குல்பி:

பால் 1/2 லிட்டர்

சர்க்கரை 2 ஸ்பூன்

ஏலப்பொடி 1/2 ஸ்பூன்

பாதாம், பிஸ்தா பொடித்தது 2 ஸ்பூன்

பாலை அடிக் கனமான பாத்திரத்தில் ஊற்றி மிதமான தீயில் வைத்து பாதியாக வற்றும் வரை சுண்டக் காய்ச்சவும். அதில் சர்க்கரை மற்றும் ஏலப்பொடி சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க விட்டு சிறிது கெட்டியானதும் அடுப்பை அணைத்துவிட்டு ஆறவிடவும்.

இதையும் படியுங்கள்:
நாவூறும் சுவையில் தட்டைப் பயறு காரக்குழம்பு செய்வது எப்படி?
malai-kulfi-recipes

பொடித்த பாதாம், பிஸ்தாக்களை சேர்த்து குல்பி அச்சுகளில் ஊற்றவும். அச்சுகள் இல்லையென்றால் சிறிய டம்ளர்களில் விட்டு அலுமினியம் ஃபாயில் வைத்து மூடி, நடுவில் குச்சி வைத்து ஏழெட்டு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். சூப்பரான மலாய் குல்ஃபி தயார்.

அடிக்கிற வெயிலுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஐட்டங்கள் இவை.

logo
Kalki Online
kalkionline.com