
தள்ளு வண்டியிலும், தெருவோரக் கடைகளிலும் சாட் ஐட்டங்களான பேல் பூரி, பானி பூரி, சமோசாக்கள் மற்றும் ஆல் டைம் ஃபேவரைட் குழிப்பணியாரம், கொத்து பரோட்டா, சுண்டல் போன்றவை அனைவராலும் விரும்பப்பட்டு உண்ணப்படுகின்றன.
அத்தோ:
சென்னையில் கிடைக்கும் ஒரு தனித்துவமான பர்மிய தெரு உணவு இது. நம் சுவைமொட்டுக்களை திருப்திபடுத்துவதுடன் குப்பை உணவாக இல்லாமல் ஆரோக்கியமானதாகவும் உள்ளது.
நூடுல்ஸ் 1 பாக்கெட்
முட்டைகோஸ் 1/4 கப்
கேரட் 1
வெங்காயம் 1
சாஸ் தயாரிக்க:
புளி சாறு, எலுமிச்சம் பழச்சாறு, மிளகாய் தூள், வறுத்த வேர்க்கடலைத் தூள், உப்பு, எண்ணை சிறிது
அலங்கரிக்க:
வறுத்த பூண்டு மற்றும் வறுத்த வெங்காயம் சிறிது
நூடுல்ஸை வேகவைத்து குளிர்ந்த நீரில் காட்டி தனியாக எடுத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம் அரை ஸ்பூன் சேர்த்து சீரகம் பொரிந்ததும் பொடியாக நறுக்கிய அல்லது துருவிய முட்டைகோஸ், கேரட், வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் எலுமிச்சை சாறு, புளி சாறு, மிளகாய்த்தூள், வறுத்த வேர்க்கடலையை பொடித்த தூள், தேவையான உப்பு, சிறிது எண்ணெய் ஆகியவற்றை கலந்து வைக்கவும். பூண்டு மற்றும் மெல்லியதாக நறுக்கிய வெங்காயத்தை நன்கு வறுத்தெடுத்து கொள்ளவும்.
இப்பொழுது வாயகன்ற பாத்திரத்தில் நூடுல்ஸ், வதக்கிய காய்கறிகள், காரசாரமான சாஸ் சேர்த்து நன்கு கலந்து மேலாக வறுத்த பூண்டு மற்றும் வெங்காயத்தை தூவி பரிமாற மிகவும் ருசியாக இருக்கும். இதனை பொதுவாக வாழைத்தண்டு சூப்புடன் சேர்த்து பரிமாற ஆஹா என்ன ருசி என்று நாவை சப்பு கொட்டத்தோன்றும்.
பானி பூரி:
கோல்கப்பா அல்லது பாணி பூரி என்ற இதனை பெரும்பாலான மக்கள் விரும்பும் சிறந்த நிறுவனம் ஆகும் சென்னையில் மட்டுமல்ல இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் பிரபலமானது. ஒவ்வொரு ஏரியாவிலும் இதனை செய்வதில் வித்தியாசமான பாணியை கையாளுகின்றனர்.
பானிபூரி பாக்கெட் 1
உருளைக்கிழங்கு
வேக வைத்தது. 4
மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
உப்பு தேவையானது
சாட் மசாலா 1 ஸ்பூன்
பெரிய வெங்காயம் 1
புளிக்கரைசல் 1 கப்
எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்
அரைப்பதற்கு: புதினா ஒரு கப், கொத்தமல்லி ஒரு கப், பச்சை மிளகாய் 3 மிக்ஸியில் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் ஆகிவற்றை நன்கு அரைத்து வடிகட்டி அத்துடன் தேவையான உப்பு, புளி கரைசல், எலுமிச்சைசாறு கலந்து ஒன்றரை கப் தண்ணீரும் சேர்த்து கலந்து வைக்கவும்.
வேகவைத்து தோல் நீக்கிய உருளைக்கிழங்கை நன்கு மசித்துக்கொண்டு அத்துடன் உப்பு, மிளகாய்த்தூள், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து தனியாக வைக்கவும்.
பானி பூரிகளை சிறிதாக ஓட்டைப்போட்டு அதற்குள் கலந்து வைத்துள்ள மசாலாக்களை வைத்து, கலந்து வைத்துள்ள புதினா கொத்தமல்லி தண்ணீர் விட்டு சாப்பிட ருசியோ ருசி.
கொத்து பரோட்டா:
பரோட்டா 4
தக்காளி 1
வெங்காயம் 2
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் 2
மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
சாட் மசாலா தூள் 1 ஸ்பூன் மிளகுத்தூள் 1/2 ஸ்பூன்
எண்ணெய் தேவையானது கறிவேப்பிலை சிறிது
கொத்தமல்லி சிறிது
தண்ணீர் (அ) மீதமான கிரேவி (அ) சால்னா 1/4 கப்
பரோட்டாக்களை துண்டு துண்டாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கி நிறம் மாறியதும் 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
இந்த சமயத்தில் சிறிது தண்ணீர் அல்லது மீதமான கிரேவியை சேர்ப்பது கொத்து பரோட்டாவை உலராமல் ஈரப்பதமாக வைத்திருக்க உதவுவதுடன் ருசியை கூட்டவும் செய்யும். பிறகு துண்டுகளாக நறுக்கிய பரோட்டாக்களை போட்டு கிளறவும். அதில் மிளகாய் தூள், மிளகுத்தூள், சாட் மசாலா எல்லாவற்றையும் போட்டுக் கலந்து கடைசியாக கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி சேர்த்து பரிமாற மிகவும் ருசியாக இருக்கும்.
சமோசாக்கள்:
தெரு உணவில் மிகவும் பிரபலமான உணவு இது. மழைக்காலமோ, வெயில் காலமோ மாலை நேர சிற்றுண்டியாக எப்படி வேண்டுமானாலும் சாப்பிடுவதற்கு ஏற்றது. இதில் வெங்காய சமோசா, புதினா சமோசா, பருப்பு சமோசா என பல இருந்தாலும் பெரும்பாலானவர்கள் விரும்புவது உருளைக்கிழங்கு ஸ்டஃபிங்கைத்தான்.
குழிப்பணியாரத்தில் இனிப்பு மற்றும் கார சுவைகள் அனைவராலும் மிகவும் விரும்பப்படுகிறது. மெரினா கடற்கரையில் கிடைக்கும் சுண்டல் மிகவும் பிரபலம். ஆலு டிக்கி சாட், பாப்டி சாட் என்று சென்னையின் தெரு உணவுகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.