
இன்றைக்கு சுவையான பாவக்காய் ஐஸ்கிரீம் மற்றும் ஹனி கேக் ரெசிபியை சிம்பிளாக வீட்டில் எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
பாவக்காய் ஐஸ்கிரீம் செய்ய தேவையான பொருட்கள்.
பாவக்காய்-2
உப்பு-தேவையான அளவு
பால்-1 கப்
பால் பவுடர்-1 கப்
பிரஷ் கிரீம்-1கப்
கன்டென்ஸ்ட் மில்க்-1/2 கப்
பாவக்காய் ஐஸ்கிரீம் செய்முறை விளக்கம்.
முதலில் 2 பாவக்காய் எடுத்துக் கொண்டு அதை இரண்டாக நறுக்கி அதனுள் இருக்கும் விதைகளை நீக்கிவிட்டு சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிவிட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து சுடுத்தண்ணீரில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
இப்போது மிக்ஸியில் 1 கப் பால், 1 கப் பால் பவுடர், 1 கப் பிரஷ் கிரீம் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். இத்துடன் ½ கப் கன்டென்ஸ்ட் மில்க் சேர்த்துவிட்டு வேகவைத்திருக்கும் பாவக்காயை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இப்போது இதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதை பிரிட்ஜில் எட்டு மணி நேம் வைத்து எடுத்தால் சுவையான பாவைக்காய் ஐஸ்கிரீம் தயார்.
நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
ஹனி கேக் செய்ய தேவையான பொருட்கள்.
எண்ணெய்-1/2 கப்
பொடியாக்கிய சர்க்கரை-3/4 கப்
தயிர்-3/4 கப்
வெண்ணிலா எசென்ஸ்-1 தேக்கரண்டி
மைதா-2 கப்
பேக்கிங் பவுடர்-1 ½ தேக்கரண்டி
பேக்கிங் சோடா-1 தேக்கரண்டி
உப்பு-தேவையான அளவு
பால்-1 ½ கப்
சர்க்கரை-3 தேக்கரண்டி
தேன்-1/4 கப்
ஜாம்-தேவையான அளவு
Dessicated coconut-தேவையான அளவு
ஹனி கேக் செய்முறை விளக்கம்.
முதலில் பவுலில் ½ கப் எண்ணெய், ¾ கப் பொடியாக்கிய சர்க்கரை, 1 தேக்கரண்டி வெண்ணிலா எசென்ஸ், ¾ கப் தயிர் சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக் கொள்ளவும்.
இப்போது இதில் 2 கப் மைதா, 1 ½ தேக்கரண்டி பேக்கிங் பவுடர், 1 தேக்கரண்டி பேக்கிங் சோடா, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்துவிடவும். கடைசியாக 1 ½ கப் அளவு காய்ச்சிய பாலை சேர்த்து நன்றாக கலந்துவிட்டு இதை ஒரு டின்னில் ஊற்றி 180 டிகிரி செல்சியசில் 30 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.
இப்போது அடுப்பில் ஃபேனை வைத்து அதில் ½ கப் தண்ணீர், 3 தேக்கரண்டி சர்க்கரை, ¼ கப் தேன் சேர்த்துவிட்டு நன்றாக கலந்துவிடவும். இப்போது கேக்கை எடுத்து அதில் செய்து வைத்திருக்கும் சுகர் சிரப்பை சேர்த்துவிட்டு ஜாமை மேலே தடவிவிட்டு Dessicated coconut ஐ தூவிவிட்டு இப்போது துண்டுகளாக வெட்டி பரிமாறவும். அவ்வளவு தான் சுவையான ஹனி கேக் தயார்.
நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.