
இன்றைக்கு சுவையான முட்டை மிட்டாய் மற்றும் சுழியம் ரெசிபிஸை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
முட்டை மிட்டாய் செய்ய தேவையான பொருட்கள்.
பால்-1 லிட்டர்
ஏலக்காய் தூள்-1 தேக்கரண்டி
நெய்-1 கப்
முட்டை-6
பாதாம்-40
சர்க்கரை-1 கப்
முட்டை மிட்டாய் செய்முறை விளக்கம்.
முதலில் ஃபேனில் 1 லிட்டர் பால் ஊற்றி நன்றாக கொதி வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு நன்றாக கெட்டியாகும் வரை கிண்டிவிட்டு அதை ஒரு தட்டில் ஊற்றி ஆற வைக்கவும்.
இப்போது சுடுத்தண்ணீரில் ஊற வைத்து தோல் நீக்கிய 40 பாதாமை மிக்ஸியில்அரைத்து எடுத்துக் கொள்ளவும். ஆற வைத்த கோவாவை ஒரு பவுலில் சேர்த்து விட்டு அரைத்து வைத்த பாதாம் பேஸ்ட்டை சேர்த்துவிட்டு அத்துடன் சர்க்கரை 1 கப், முட்டை 6 ஐ சேர்த்துக் கொள்ளவும். கடைசியாக ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி, நெய் 1கப் சேர்த்து கட்டியில்லாமல் கலந்துவிட்டுக் கொள்ளவும்.
இப்போது ஃபேனில் இந்த கலவையை சேர்த்து கெட்டியாகும் வரை கலந்து விட்டுக் கொண்டேயிருக்கவும். இப்போது ஒரு ஃபேக்கிங் டிரேவில் நெய் தடவி விட்டு செய்து வைத்திருக்கும் கலவையை அதில் சேர்த்து மேலே பாதாம் நட்ஸை சேர்த்துக் கொள்ளவும்.
இப்போது ஒரு அடிகணமான பாத்திரத்தில் கல் உப்பு சேர்த்து நன்றாக பரப்பிவிட்டுக் கொள்ளவும். அதில் ஒரு பாத்திரத்தை வைத்து அதன் மீது டிரேவை வைத்து 40 நிமிடம் மூடிப்போட்டு வேக வைத்து எடுத்தால், சுவையான முட்டை மிட்டாய் தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
சுழியம் செய்ய தேவையான பொருட்கள்.
கடலைப்பருப்பு-1 கப்
மஞ்சள் தூள்-சிறிதளவு
நெய்-1 தேக்கரண்டி
துருவிய தேங்காய்-2 தேக்கரண்டி
நாட்டுச்சர்க்கரை-1கப்
ஏலக்காய்-1 சிட்டிகை
அரிசி-1கப்
உளுந்து-1கப்
உப்பு-தேவையான அளவு
எண்ணெய்-தேவையான அளவு
சுழியம் செய்முறை விளக்கம்.
முதலில் கடலைப்பருப்பு 1 கப் இரவு முழுவதும் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது இதை குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு மஞ்சள் தூள் சிறிது சேர்த்து நன்றாக வேகவைத்து மசித்து எடுத்துக் கொள்ளவும்.
இப்போது ஃபேனில் 1 தேக்கரண்டி நெய் விட்டு துருவிய தேங்காய் 2 தேக்கரண்டி சேர்த்து வறுத்துவிட்டு நாட்டுச்சர்க்கரை 1 கப் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கலந்துவிட்டு அதில் மசித்து வைத்திருக்கும் பருப்பை சேர்த்து கலந்துவிடவும். இதில் ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி சேர்த்து கலந்துவிடவும்.
அரிசி 1 கப், உளுந்து 1 கப் சேர்த்து தண்ணீர் விட்டு 4 மணிநேரம் ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும். இப்போது அரைத்த மாவை ஒரு பவுலில் மாற்றிக்கொண்டு அதில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து கலந்துவிட்டுக் கொள்ளவும்.
இப்போது செய்து வைத்திருக்கும் பருப்பு கலவையை உருட்டி அதை மாவில் முக்கி காய வைத்திருக்கும் எண்ணெய்யில் நன்றாக பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சூப்பரான சுவையில் சுழியம் தயார்.