பிரட் பயன்படுத்தி புட்டு செய்யலாம் வாங்க! 

Bread Puttu
Bread Puttu
Published on

புட்டுன்னா அரிசி மாவுலதான் செய்யணும்னு இல்லங்க. பிரெட்லயும் சூப்பரான புட்டு செய்யலாம். இது ரொம்ப ஈஸியா பண்ணக்கூடிய ஒரு ரெசிபி. வீட்ல இருக்கிற பிரெட்டை வச்சே அட்டகாசமான ஒரு ஸ்நாக்ஸோ இல்லன்னா பிரேக்ஃபாஸ்ட்டோ ரெடி பண்ணிடலாம். குழந்தைகளுக்கு இது ரொம்ப பிடிக்கும். வாங்க, இந்த டேஸ்ட்டியான பிரட் புட்டு எப்படி பண்ணலாம்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • பிரெட் ஸ்லைஸ் - 6 

  • தேங்காய் துருவல் - 1/2 கப்

  • சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்

  • ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்

  • நெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:

  1. முதல்ல பிரெட் ஸ்லைஸை சின்ன சின்ன துண்டுகளா பிச்சுக்கோங்க. பிரெட்டை மிக்ஸில போட்டு ரொம்ப பவுடர் மாதிரி அரைக்க வேண்டாம். கொஞ்சம் கொரகொரப்பா இருந்தா புட்டு நல்லா இருக்கும்.

  2. ஒரு பாத்திரத்துல பிச்ச பிரெட், தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலக்காய் பொடி இது எல்லாத்தையும் சேர்த்து நல்லா கலந்துக்கோங்க. சர்க்கரை உங்களுக்கு தேவையான அளவுக்கு போட்டுக்கோங்க. இனிப்பு அதிகமா வேணும்னா இன்னும் கொஞ்சம் கூட சேர்த்துக்கலாம்.

  3. புட்டு பாத்திரத்துல இல்லன்னா இட்லி பாத்திரத்துல இந்த பிரெட் கலவையை போட்டு ஆவியில் வேக வைக்கணும். புட்டு பாத்திரம் இல்லன்னா ஒரு காட்டன் துணியை இட்லி தட்டுல போட்டு அதுக்குள்ள இந்த பிரெட் கலவையை வெச்சு வேக வைக்கலாம்.

  4. ஒரு 10 நிமிஷம் ஆவியில் வேக வச்சா போதும். பிரெட் சீக்கிரமே வெந்துடும். ரொம்ப நேரம் வேக வைக்கணும்னு இல்ல.

  5. 10 நிமிஷம் கழிச்சு எடுத்தா சூப்பரான, சாஃப்டான பிரட் புட்டு ரெடி. வேணும்னா மேல கொஞ்சமா நெய் ஊத்தி சாப்பிடலாம். அது உங்க விருப்பம் தான்.

இதையும் படியுங்கள்:
10 நிமிடத்தில் சூப்பரான ஸ்நாக்ஸ்: பிரட் வெஜ் கட்லெட் மற்றும் சோயா கட்லெட் ரெசிபி!
Bread Puttu

இந்த பிரட் புட்டுக்கு சைடிஷ் எதுவும் தேவையில்லைங்க. அப்படியே சாப்பிடவே ரொம்ப நல்லா இருக்கும். வேணும்னா வாழைப்பழம் இல்லன்னா வேற எந்த பழத்தோட வேணாலும் சேர்த்து சாப்பிடலாம். சர்க்கரைக்கு பதிலா நாட்டு சர்க்கரை இல்லன்னா வெல்லம் கூட யூஸ் பண்ணலாம்.

சீக்கிரமா செய்யக்கூடிய இந்த ரெசிபியை நீங்களும் உங்க வீட்ல ட்ரை பண்ணிப் பாருங்க. குழந்தைகளுக்கு இது ரொம்ப பிடிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com