கடையில் நிஜமான பழுப்பு ரொட்டியை (Brown Bread) எப்படி அடையாளம் காணலாம்?

Whole wheat bread
Whole wheat bread
Published on

நீங்கள் எடுத்துப் பார்க்கப்படும் பிரெடில் உள்ள பொருள் பட்டியலை சரிபார்க்கவும். 'முழுக் கோதுமை மாவு' (Whole Wheat Flour) அல்லது 'முழுத் தானியம்' (Whole Grain) முதன்மை பொருளாக இருக்க வேண்டும்.

சுத்திகரிக்கப்பட்ட மாவு (Refined Flour), 'உணவு பதப்படுத்தப்பட்ட கோதுமை மாவு' (Enriched Wheat Flour) அல்லது 'மைதா' என்பவை முதல் இடத்தில் இருந்தால் தவிர்க்கவும்.

கேரமல் கலர் (Caramel Coloring) அல்லது மொலாஸஸ் (Molasses) சேர்த்து வெள்ளை ரொட்டியை பழுப்பு நிறமாக மாற்றியிருக்கலாம்.

உண்மையான பழுப்பு ரொட்டியில் ஒரு துண்டுக்குக் குறைந்தது 2-3 கிராம் நார்ச்சத்து இருக்க வேண்டும்.

2 கிராமுக்கு குறைவாக இருந்தால், அது போலியான பழுப்பு ரொட்டி என்று சந்தேகிக்கலாம்.

உண்மையான முழுக் கோதுமை ரொட்டி சற்று கனமாகவும், நிறையத் தானியத் துகள்களுடன் இருப்பதுமாக இருக்கும்.

போலியான பழுப்பு ரொட்டி வெள்ளை ரொட்டியைப் போலவே மென்மையாகவும், மிகவும் மெலிதாகவும் இருக்கும்.

லேபிளை கவனமாகப் படிக்கவும்.

'100% Whole Wheat' அல்லது 'Whole Grain' என்று குறிப்பிட்டிருப்பதைத் தேர்வு செய்யவும்.'Wheat Bread' போன்ற தவறாகச் சொல்லப்படும் வார்த்தைகளை நம்ப வேண்டாம், ஏனெனில் இது முழுக் கோதுமை அல்ல.

உண்மையான முழுக் கோதுமை ரொட்டி சற்று அதிக விலையிலேயே இருக்கும். போலியான பழுப்பு ரொட்டி சிக்கனமாகக் கிடைக்கும்.

இந்தக் குறிப்புகளைப் பின்பற்றினால், உண்மையான, ஆரோக்கியமான பழுப்பு ரொட்டியை நீங்கள் சரியாகத் தேர்ந்தெடுக்கலாம்!

என்ன வாசகர்களே இனி மேலாவது கவனமாக இருங்கள்.

இதையும் படியுங்கள்:
பஜ்ரா ரொட்டி: ஆரோக்கியம் நிறைந்த சுவையான உணவு!
Whole wheat bread

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com