இந்த கிறிஸ்துமஸ்கு உங்க வீட்ல இதுதான் ஹைலைட்! பேக்கரி சுவையே தோற்றுப்போகும் ரகசிய ரெசிபி!

Cookies
Cookies
Published on

டிசம்பர் மாதம் பிறந்துவிட்டாலே காற்றில் ஒரு குளிர்ச்சியும், மனதிற்குள் ஒரு கொண்டாட்டமும் தொற்றிக்கொள்ளும். கிறிஸ்துமஸ் பண்டிகை என்றாலே நம் நினைவுக்கு வருவது வண்ண விளக்குகளும், விதவிதமான கேக்குகளும்தான். ஆனால், கேக்குகளை விடக் குழந்தைகள் அதிகம் விரும்பிச் சாப்பிடுவது மொறுமொறுப்பான குக்கீஸ்களைத் தான். 

கடைகளில் விற்கப்படும் பிஸ்கட்களில் என்ன கலந்திருப்பார்கள், முட்டை இருக்குமா என்றெல்லாம் யோசித்துப் பயப்படத் தேவையில்லை. உங்கள் வீட்டில் இருக்கும் சாதாரணப் பொருட்களை வைத்தே, ஒரு பிரம்மாண்டமான பேக்கரியில் கிடைப்பது போன்ற தரமான, சுவையான 'பட்டர் குக்கீஸை' (Butter Cookies) நீங்களே செய்து அசத்தலாம். வாருங்கள், இந்த கிறிஸ்துமஸை இன்னும் இனிப்பாக்குவோம்!

தேவையான பொருட்கள்:

  • வெண்ணெய் – 100 கிராம்

  • பொடித்த சர்க்கரை – ½ கப்

  • மைதா மாவு – 1 ¼ கப் 

  • சோள மாவு – 1 மேசைக்கரண்டி

  • வெண்ணிலா எசென்ஸ் – 1 டீஸ்பூன்

  • பால் – 2 டீஸ்பூன் 

  • அலங்கரிக்க – செர்ரி பழத் துண்டுகள் அல்லது கலர் ஸ்பிரிங்கில்ஸ்.

செய்முறை:

இந்த குக்கீஸ் செய்வதில் உள்ள சூட்சுமமே மாவு பிசைவதில்தான் இருக்கிறது. முதலில், ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து வெளியா வைக்கப்பட்ட, அறை வெப்பநிலையில் உள்ள வெண்ணெயை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டுக்கொள்ளுங்கள். 

வெண்ணெய் கட்டியாக இருக்கக்கூடாது, குழைவாக இருக்க வேண்டும். அதனுடன் பொடித்த சர்க்கரையைச் சேர்த்து, ஒரு கரண்டி அல்லது விஸ்க் வைத்து நன்றாக அடிக்க வேண்டும். 

இதையும் படியுங்கள்:
டிரம்ப்பின் அடுத்த அதிரடி..! சுமார் 1300 பேர் பணி நீக்கம்..!
Cookies

சுமார் 5 நிமிடங்கள் கைவிடாமல் அடித்தால், அந்த வெண்ணெய் கலவை ஒரு 'வெண்மையான கிரீம்' போல மாறிவிடும். இதுதான் குக்கீஸ் மென்மையாக வருவதற்கான அடிப்படை.

பிறகு, அதில் வாசனைக்காக வெண்ணிலா எசென்ஸ் ஊற்றிக் கலக்கவும். இப்போது, மைதா மாவு மற்றும் சோள மாவை ஒரு சல்லடை வைத்துச் சலித்து, அந்த வெண்ணெய் கலவையில் கொட்டவும்.

பேக் செய்யும் முறை:

இப்போது சப்பாத்தி மாவு பிசைவது போலக் கையை வைத்து அழுத்திப் பிசையக்கூடாது. விரல்களால் லேசாகக் கிளறி, மாவை ஒன்று திரட்டினால் போதும். மாவு மிகவும் உலர்ந்து போய் உதிர்வது போல இருந்தால் மட்டும், ஒரு ஸ்பூன் பால் தெளித்துக்கொள்ளுங்கள்.

மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, உள்ளங்கையில் வைத்து லேசாகத் தட்டவும். அதன் நடுவில் ஒரு செர்ரி துண்டையோ அல்லது வண்ணமயமான மிட்டாய்களையோ வைத்தால் பார்க்க அழகாக இருக்கும். 

ஓவனை 170 டிகிரி செல்சியஸில், 10 நிமிடம் முன்கூட்டியே சூடு செய்து வைக்கவும்.

பிறகு, நெய் தடவிய தட்டில் பிஸ்கட்களை அடுக்கி, 12 முதல் 15 நிமிடங்கள் வரை 'பேக்' செய்யவும். பிஸ்கட்டின் ஓரங்கள் லேசாகச் சிவந்து பொன்னிறமாக மாறும்போது வெளியே எடுத்துவிடுங்கள்.

இதையும் படியுங்கள்:
நடிகர் தாடி பாலாஜி தவெகவில் இருந்து விலக இதுதான் காரணம்..!
Cookies

ஓவனில் இருந்து எடுக்கும்போது பிஸ்கட் தொட்டால் மென்மையாகத்தான் இருக்கும். "ஐயோ வேகவில்லையே" என்று பயப்பட வேண்டாம். வெளியே எடுத்து வைத்து, சூடு ஆற ஆறத்தான் அது நல்ல மொறுமொறுப்புத் தன்மையை அடையும். 

இந்த முறை கிறிஸ்துமஸ் தாத்தா வரும்போது, அவருக்குக் கடையிலிருந்து வாங்காமல், நீங்களே செய்த இந்த அன்புப் பரிசைக் கொடுத்துப் பாருங்கள், கொண்டாட்டம் களைகட்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com