

நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கினார்.நடிகர் விஜயுடன் திரைப்படங்களில் நடித்த தாடி பாலாஜி அவர் கட்சி தொடங்கியதும் அதில் தன்னை இணைத்து கொண்டார். அதன்பிறகு நடிகர் விஜயின் முகத்தை தனது மார்பில் பச்சை குத்தினார். இதுதொடர்பான வீடியோவையும் அவர் வெளியிட்டு இருந்தார்.
விஜயின் தீவிர ரசிகரும், தவெக நிர்வாகியுமான நடிகர் தாடி பாலாஜி நேற்று கட்சியில் இருந்து விலகி ஜோஸ் சார்லஸ் மார்டினின் கட்சியில் இணைந்தார். தாடி பாலஜி, தவெகவுக்கு எவ்வளவு ஆதரவாக பேசியும் பொருப்பு வழங்கப்படாததால் விரக்தியில் இருந்தார்.இந்நிலையில் தவெகவில் இருந்து விலகி, விஜய் பாணியிலேயே புதுச்சேரியில் கட்சி ஆரம்பித்த ஜோஸ் சார்லஸின் லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்துள்ளார்.
மேலும் கட்சியில் இருந்து விலகியதற்கு தவெகவில் இருக்கும் 2ம் கட்ட தலைவர்களே காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளார். அவர்கள் தன்னை விஜய் அருகில் கூட நெருங்க விடவில்லை என்றும், விஜய்யை சந்திக்க வாய்ப்பு கிடைத்திருந்தால் அனைத்து பிரச்னைகளையும் சொல்லியிருப்பேன் என்றும் கூறியுள்ளார்.