கேரளா ஸ்பெஷல் சர்க்கரை உப்பேரி செய்யலாம் வாங்க!

சர்க்கரை உப்பேரி
சர்க்கரை உப்பேரி

கேரளாவில் மிகவும் புகழ்பெற்ற இனிப்பு, சர்க்கரை உப்பேரியாகும். இதை  சர்க்கரை வரட்டி என்றும் கூறுவார்கள். பண்டிகை காலங்களில் உணவுடன் சேர்த்து பரிமாறுவார்கள். கேரளாவில் இது அனைவராலும் விரும்பப்படும் பேவரைட் ஸ்னாக்ஸாகும்.

சக்கரை உப்பேரி செய்ய தேவையான பொருட்கள்:

நேந்திரம் பழம்-3

வெல்லம்-1 கப்.

சுக்கு பொடி-1 தேக்கரண்டி.

ஜீரகப்பொடி-1/2 தேக்கரண்டி.

ஏலக்காய் பொடி-1/2 தேக்கரண்டி.

சர்க்கரை-2 தேக்கரண்டி.

அரிசி மாவு-1 தேக்கரண்டி.

எண்ணெய்- தேவையான அளவு.

சர்க்கரை உப்பேரி செய்முறை விளக்கம்:

முதலில் நேந்திர பழம் 3 ஊரித்து எடுத்து கொள்ளவும். பிறகு அதை சிறு  துண்டுகளாக வெட்டி தண்ணீரில் கழுவி எடுத்து நன்றாக வடிகட்டிய பிறகு அடுப்பில் நன்றாக காய வைத்திருக்கும் எண்ணெய்யில் போட்டு பொரிக்கவும். நேந்திரம் பழம் நன்றாக கோல்டன் பிரவுன் நிறம் வரும் வரை பொரித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
மகிழ்ச்சியாய் இருப்பது எப்படி? அது உங்கள் கையில்தான் உள்ளது!
சர்க்கரை உப்பேரி

இப்போது ஒரு கடாயில் 1 கப் வெல்லம் அத்துடன் ¼ கப் தண்ணீர் சேர்த்து பாகு தயார் செய்யவும். வெல்லம் கரைந்த பிறகு வடிகட்டி வைத்துக்கொள்ளவும். இதற்கு நன்றாக பிளேவர் தருவதற்கு 1 தேக்கரண்டி சுக்கு தூள், ½ தேக்கரண்டி சீரகதூள், ½ தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.

இப்போது இன்னொரு குட்டி பவுலில் 2 தேக்கரண்டி சக்கரை அத்துடன் 1 தேக்கரண்டி அரிசி மாவு சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.

இப்போது மறுபடியும் வெல்லப் பாகை அடுப்பில் வைத்து சற்று கெட்டி ஆகும் வரை கலக்கவும். பாகு கெட்டியானதும், அத்துடன் எடுத்து வைத்திருந்த சுக்கு தூள் கலவையை சேர்த்து ஒருமுறை பிரட்டி விட்டு அத்துடன் பொரித்து வைத்த நேந்திரத்தை சேர்த்து கிண்டவும். இப்போது அத்துடன் சக்கரை அரிசிமாவு கலவையை சேர்த்து நன்றாக கிண்டவும். கடைசியில் எல்லாம் உதிரி உதிரியாக வரும் வரை கிண்டவும். இப்போது சக்கரை உப்பேரி தயார். நன்றாக ஆறவிட்டு பிறகு பரிமாறவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com