
செய்ய தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசியில் வடித்த சாதம்- அரை கப்
வெல்லத் துருவல் - ஒரு கப்
பால் -இரண்டு கப்
வறுத்த எள்ளு- கால் கப்
முந்திரி -ஒரு டேபிள் ஸ்பூன்
பல்லு பல்லாக சீவிய தேங்காய்- ஒரு டீஸ்பூன்
நெய்- ஒரு டேபிள் ஸ்பூன்
வறுத்த திராட்சை , பாதாம் ,பிஸ்தா சீவல் தலா- ஒரு டீஸ்பூன்
செய்முறை:
வறுத்த எள்ளுடன் முந்திரியை சேர்த்து விழுதாக அரைத்து வைக்கவும். வெல்லத்தில் தண்ணீர் விட்டு நன்றாகக் காய்ச்சி லேசான பாகுபதம் வந்தவுடன் பால் சேர்த்து மிதமான தீயில் வைத்து அதனுடன் அரைத்த எள்ளு விழுதைச் சேர்த்து கொதிக்க விடவும்.
பின்னர் பாஸ்மதி சாதம் சேர்த்து வேகவிட்டு நன்றாக கலந்து வெந்து வாசம் வந்தவுடன் நெய்யில் வறுத்த திராட்சை, தேங்காய், பாதாம், பிஸ்தா சீவலை தூவி இறக்கவும். கால்சியம் குறைபாட்டை நீக்கும் எள் பாயசம் ரெடி. இந்தப் பாயாசத்தை நீர்க்க சாப்பிட்டாலும் ருசியாக இருக்கும். கெட்டியாக சாப்பிட்டாலும் ருசி குறையாது.
மிக்ஸட் ஃபுரூட் ஐஸ் கிரீம்
செய்ய தேவையான பொருட்கள்:
மாம்பழம், வாழைப்பழம், பேரிச்சம்பழம் மூன்றும் சேர்த்து- இரண்டு கப்
பாதாம், முந்திரி தலா- 2
சர்க்கரை- 2 கைப்பிடி
திக்கான பால்- ஒரு கப்
செய்முறை:
காய்ச்சி ஆறிய திக்கான பாலில் மேற்கூறிய பழங்கள் மற்றும் சுகர், நட்ஸ்களைச் சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்து அழகழகான கிண்ணங்களில் ஊற்றி அதில் ஒரு குச்சியை செருகி ஃப்ரீசரில் ஒரு மணி நேரம் வைத்து விடவும். பிறகு எடுத்து சுவைக்க வித்தியாசமான சுவையில் அசத்தும் இந்த ஐஸ்கிரீம். ஐஸ்கிரீம் என்றால் கடையில்தான் வாங்க வேண்டுமா என்ன? சீசனில் நாமும் செய்து அசத்தலாமே!