ஆரோக்கியமான லஞ்ச் பாக்ஸ் ரெசிபிகள் சில..!

Variety foods for children
Box recipes
Published on

ஞ்ச் பாக்ஸில் கொடுத்துவிடும் உணவுகள் சில சமயம் அப்படியே திருப்பி கொண்டு வரப்படும்போது பெற்றாராகிய நமக்கு விரக்தியை கொடுப்பதுடன் குழந்தைகளின் உடல் நலத்தையும் கெடுத்துவிடும். குழந்தைகளுக்கு வெரைட்டியாகவும், நிறைய காய்கறிகளை பயன்படுத்தியும் ஆரோக்கியமான உணவை செய்து கொடுப்பது மிகவும் முக்கியம். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான லஞ்ச் பாக்ஸ் ரெசிபிகள் சிலவற்றை இப்பதிவில் காணலாம்.

ரிச் வெஜிடபிள் ரோல் சப்பாத்தி:

கோதுமை மாவு 2 கப் 

நெய் 2 ஸ்பூன் 

சர்க்கரை 1/2 ஸ்பூன்

தேங்காய் பால் 1/2 கப்

உப்பு தேவையானது

சீரகம் 1/2 ஸ்பூன்

கேரட் துருவல் 1/2 கப்

பன்னீர் துருவல் 1 கப்

பொடியாக நறுக்கிய வெங்காயம் 1கப்

கோதுமை மாவுடன் தேங்காய் பால், அரை ஸ்பூன் சர்க்கரை, உப்பு, நெய் 2 ஸ்பூன் சேர்த்து தேவையான தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பிசைந்து கொள்ளவும். வாணலியில் அரை ஸ்பூன் சீரகம் போட்டு எண்ணெய் விட்டு சீரகம் பொரிந்ததும் கேரட் துருவலையும் வெங்காயத்தையும் சேர்த்து சிறிது உப்பு போட்டு வதக்கவும்.

சூடான தோசைக்கல்லில் சப்பாத்திகளை போட்டு எடுத்து அதன் நடுவில் வதக்கிய கேரட், வெங்காயத்தை பரவலாக பரப்பி, சீஸ் துருவலையும் சேர்த்து சுருட்டி ரோல் செய்யவும். இதனை அப்படியே கொடுக்கலாம் அல்லது கத்திக்கொண்டு சின்ன சின்ன துண்டுகள் போட்டும் கொடுக்கலாம்.

வெஜிடபிள் சாண்ட்விச்:

சாண்ட்விச் பிரட் 1 பாக்கெட்bre

வெண்ணெய் 2 ஸ்பூன் 

எண்ணெய் சிறிது 

காரட் 1

குடைமிளகாய் பாதி

வெங்காயம் 1

தக்காளி 1

வெள்ளரிக்காய் பாதி

தக்காளி சாஸ் 2 ஸ்பூன்

கரம் மசாலா 1/2 ஸ்பூன்

காரப்பொடி 1/4 ஸ்பூன்

உப்பு சிறிது

கொத்தமல்லி சிறிது

இதையும் படியுங்கள்:
பிரபல இனிப்பு வகையான சோமாஸ் (Sweet Somas) மற்றும் தேன் மிட்டாய் செய்வது எப்படி?
Variety foods for children

வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், தக்காளி, துருவிய கேரட், குடைமிளகாய், வெள்ளரிக்காய் ஆகியவற்றை போட்டு தேவையான உப்பு, காரப்பொடி, கரம் மசாலா சேர்த்து வதக்கவும். கடைசியாக கொத்தமல்லி இலைகளை பொடியாக நறுக்கி சேர்த்து விடவும். ஸ்டப்ஃபிங் மசாலா ரெடி.

பிரட்டை தோசை கல்லில் ரோஸ்ட் செய்து பிறகு பிரட் துண்டின் ஒருபுறம் தக்காளி சாஸ் தடவி மற்றொரு பிரெட் தூண்டில் வதக்கிய காய் கலவைகளை சேர்த்து வைத்து மூடி தோசை கல்லில் சிறிது வெண்ணை அல்லது நெய் விட்டு டோஸ்ட் செய்து எடுக்க மிகவும் ருசியான சான்ட்விச் தயார். செய்வதும் எளிது சத்தும் நிறைந்தது. குழந்தைகளும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

ரெட் சாஸ் ஸ்பெகடி:

ஸ்பெகடி 1 பாக்கெட்

ஆலிவ் எண்ணெய் 2 ஸ்பூன் 

பூண்டு 4 பற்கள் 

வெங்காயம் 1 

குடைமிளகாய் பாதி 

கேரட் 1

தக்காளி 6

ஓரிகனோ 1 ஸ்பூன் 

சில்லி ஃப்ளேக்ஸ் 1 ஸ்பூன் மிளகுத்தூள் 1 ஸ்பூன் 

உப்பு தேவையானது 

சர்க்கரை சிறிது 

துருவிய சீஸ் 2 ஸ்பூன்

இதையும் படியுங்கள்:
நவராத்திரிக்கு மட்டுமல்ல எப்போதுமே சத்தான சுண்டல் செய்து அசத்தலாம்…!
Variety foods for children

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். அதில் சிறிது கத்தியால் கீறிய தக்காளியைப் போட்டு இரண்டு நிமிடம் கொதித்ததும் ஆறவைத்து தோலை எடுத்துவிட்டு உள்ளிருக்கும் விதைகளையும் நீக்கி விழுதாக அரைக்காமல் சிறிது கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதில் ஸ்பெகடியை சேர்த்து உப்பு போட்டு வேக விடவும். வெந்ததும் நீரை வடிகட்டி குளிர்ந்த நீரில் ஒருமுறை அலசி வைக்கவும்.

வாணலியில் ஆலிவ் எண்ணெய் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கிய காய்கறிகளைப் போட்டு வதக்கவும். பிறகு அரைத்த தக்காளி சேர்த்து உப்பு, மிளகுத்தூள், சில்லி ஃப்ளேக்ஸ், ஓரிகனோ போட்டு கொதிக்க விடவும். நன்கு வதங்கி வந்ததும் துருவிய சீஸ் சேர்த்து கலந்து விட்டு கடைசியாக ஸ்பெகடியை சேர்த்து கிளறவும். மிகவும் ருசியான ரெட் சாஸ் ஸ்பெகடி தயார்.

குழந்தைகள் இதனை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com