ஹோட்டல் டேஸ்ட் கடாய் பனீர் & பேபி கார்ன் மஞ்சூரியன் செய்யலாமா?

kadai paneer recipe
kadai paneer recipe
Published on

வ்வளவுதான் பார்த்து பார்த்து செய்தாலும் நம் வீட்டில் உள்ளவர்கள் ஹோட்டல் உணவுகளையே அதிகம் விரும்புவார்கள். அவர்களுக்காகவே ஹோட்டல் டேஸ்ட் தரும் இந்த இரண்டும்.

கடாய் பனீர்
தேவையானவை:

பன்னீர் துண்டுகள் - அரை கப்
கலர் குடைமிளகாய்கள் -  அரை கப் பெங்களூர் தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
வர மிளகாய் 2
தனியா - 2 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 2
முந்திரிப்பருப்பு - 8
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 3 ஸ்பூன்

செய்முறை:
அடிகனமான கடாயில் தேவையான எண்ணெய் விட்டு நீளவாக்கில் மெலிதாக அறிந்த வெங்காயம் மற்றும் சிறிய துண்டுகளாக நறுக்கிய பச்சை, மஞ்சள் அல்லது சிவப்பு நிற குடைமிளகாய்களை போட்டு வதக்கி அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். மிக்ஸியில் தனியா மற்றும் வரமிளகாய் இரண்டையும் கொரகொரப்பாக அரைத்து எடுத்து வதங்கிய குடைமிளகாயில் சேர்த்துக் கிளறவும்.

தக்காளியை வேகவைத்து அதையும் மிக்சியில் அடித்து சேர்த்து தேவையான உப்பு போடவும். பன்னீர் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.   ஸ்பைசியாக வேண்டும் என்றால் சிறிது நீர் தெளிக்கவும்.  கடைசியாக ஒடித்த முந்திரிப்பருப்புகளை  சேர்த்து இறக்கவும். இதை சுடச்சுட கடாயில் வைத்து சிறிது நேரம் அடுப்பில் மூடி வைத்து அப்படியே எடுத்து வந்து பரிமாறவும். இது சப்பாத்தி பரோட்டா நான் ஆகியவற்றுக்கு ஏற்ற தொட்டுக்கொள்ள ஏற்ற ரிச் டிஷ்.

பேபி கார்ன் மஞ்சூரியன்

தேவை:

பேபிகார்ன்- ஒரு பாக்கெட்
மைதா மாவு - 4 ஸ்பூன்
கார்ன்பிளவர் மாவு - ஒரு ஸ்பூன் மிளகுத்தூள்-  ஒரு டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் -  1 சிட்டிகை
பெரிய வெங்காயம் - 3
குடைமிளகாய் - 1
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தேவையான அளவு
சிறிய வெங்காயம் - 10
இஞ்சி- சிறிய துண்டு
பூண்டு - 10 பற்கள்
பச்சை மிளகாய் – 5

இதையும் படியுங்கள்:
சுவையான வெற்றிலை சாதமும், முருங்கைக்கீரை முட்டை பொரியலும் செய்யலாமா?
kadai paneer recipe

செய்முறை:

பேபிகார்ன்களை வேண்டிய வடிவத்தில் நறுக்கிக் கொள்ளவும். சின்ன வெங்காயம் இஞ்சி பூண்டு மிளகாய் இவற்றை மிக்சியிலிட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பேபிகார்ன்களுடன் தேவையான உப்பு , கொரகொரப்பாக அரைத்த விழுது மிளகுத்தூள் சேர்த்து பிசறி அரை மணி நேரம் ஊறவிடவும். ஊறியதும் பிரிந்து வரும் மசாலாவை மட்டும் தனியே வடித்து எடுத்து வைத்து விடவும்.

இன்னொரு பாத்திரம் சலித்த மைதாவுடன்  பேக்கிங் பவுடர் சேர்த்து தண்ணீர்விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக்கொண்டு மசாலா ஊறிய பேபி கார்ன்களின் மேல் கார்ன்பிளவர் மாவு தூவி நன்றாக புரட்டி மைதாமாவுக் கலவையில்  தோய்த்து காய்ந்த எண்ணெயில்  பொரித்து எடுக்கவும்.

ஒரு வானலியில்  சிறிது எண்ணெய்விட்டு சற்று பெரிய சதுரமாக வெட்டிய வெங்காயம் மற்றும் குடைமிளகாயைப் போட்டு வதக்கி அதனுடன் எடுத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து சிறிது நீர் விட்டு கொதிக்க விடவும்  இப்போது பொறித்து வடித்த பேபி கார்ன் மஞ்சூரியன்களை அதில் சேர்த்துக் கிளறி எடுத்து சூடாக பரிமாறவும். தேவைப்பட்டால் நறுக்கிய கறிவேப்பிலை  மேலே தூவலாம். இதை சுண்டவிட்டு அப்படியேவும் சாப்பிடலாம். இல்லையெனில் கிரேவியாகவும் பயன்படுத்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com