How about making delicious betel rice and drumstick egg fries?
healthy foodsimage credit - pixabay

சுவையான வெற்றிலை சாதமும், முருங்கைக்கீரை முட்டை பொரியலும் செய்யலாமா?

Published on

ன்றைக்கு உடலுக்கு ஆரோக்கியமான வெற்றிலை சாதம் மற்றும் முருங்கைக்கீரை முட்டை பொரியல் ரெசிபியை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யலாம்னு பார்ப்போம்.

வெற்றிலை சாதம் செய்ய தேவையான பொருட்கள்;

உளுந்து-1 தேக்கரண்டி.

மிளகு-1 தேக்கரண்டி.

எள்ளு-1தேக்கரண்டி.

வேர்க்கடலை-1 தேக்கரண்டி.

பாசிப்பருப்பு-1 தேக்கரண்டி.

கருவேப்பிலை- சிறிதளவு.

வெற்றிலை-3

தாளிக்க,

எண்ணெய்-2 தேக்கரண்டி.

கடுகு- ½ தேக்கரண்டி.

சீரகம்- ½ தேக்கரண்டி.

காய்ந்த மிளகாய்-2

பூண்டு-5

கடலைப்பருப்பு- ½ தேக்கரண்டி.

கருவேப்பிலை- சிறிதளவு.

வடித்த சாதம்-1 ½ கப்.

நெய்-1 தேக்கரண்டி.

வெற்றிலை சாதம் செய்முறை விளக்கம்;

முதலில் 3 வெற்றிலையை சிறிதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். இப்போது கடாயில் 1 தேக்கரண்டி உளுந்து, 1 தேக்கரண்டி வேர்க்கடலை, 1 தேக்கரண்டி எள்ளு, 1 தேக்கரண்டி மிளகு, 1 தேக்கரண்டி பாசிப்பருப்பு, கருவேப்பிலை, வெற்றிலையை சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ளவும்.

இது நிறம் மாறி வாசனை வந்ததும் மிக்ஸியில் மாற்றி கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். இப்போது கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு ½ தேக்கரண்டி, சீரகம் ½ தேக்கரண்டி, ½ தேக்கரண்டி கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் 2, கருவேப்பிலை, நறுக்கிய பூண்டு 5 சேர்த்து நன்றாக வதக்கவும்.

இப்போது இதில் வடித்த 1 ½ கப் சாதத்தை சேர்த்துக்கொள்ளவும். ¾ தேக்கரண்டி உப்பு சேர்த்துவிட்டு, அரைத்து வைத்த பொடி மற்றும் வெற்றிலை சிறிது தூவி நன்றாக கிண்டவும். கடைசியாக 1 தேக்கரண்டி நெய் சேர்த்து கிண்டி இறற்கினால் சூப்பர் டேஸ்டான வெற்றிலை சாதம் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

முருங்கைக்கீரை முட்டை பொரியல் செய்ய தேவையான பொருட்கள்;

எண்ணெய்-1 தேக்கரண்டி.

கடுகு-1/2 தேக்கரண்டி.

உளுந்து-1/2 தேக்கரண்டி.

சீரகம்-1/2 தேக்கரண்டி.

பச்சை மிளகாய்-1

வரமிளகாய்-1

பூண்டு-5

வெங்காயம்-1

முருங்கைக்கீரை-2 கைப்பிடி.

முட்டை-3

உப்பு-1/2 தேக்கரண்டி.

மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி.

மிளகுத்தூள்-1/2 தேக்கரண்டி.

தேங்காய் துருவல்- சிறிதளவு.

கொத்தமல்லி- சிறிதளவு.

இதையும் படியுங்கள்:
வேற லெவல் சுவையில் வெஜிடபிள் பாயா-கேரளா சம்மந்தி செய்யலாம் வாங்க!
How about making delicious betel rice and drumstick egg fries?

முருங்கைக்கீரை முட்டை பொரியல் செய்முறை விளக்கம்;

முதலில் கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து கடுகு ½ தேக்கரண்டி, உளுந்து ½ தேக்கரண்டி, சீரகம் ½ தேக்கரண்டி சேர்த்துக்கொள்ளவும்.

இத்துடன் 1 பச்சை மிளகாய், 1 வரமிளகாய், 5 பூண்டை இடித்து சேர்த்துக்கொள்ளவும். இத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் 1 சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு 2 கைப்பிடி முருங்கைக்கீரையை சேர்த்துக்கொள்ளவும்.

கீரைக்கு தேவையான ½ தேக்கரண்டி உப்பு, ½ தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் வதக்கிக்கொள்ளவும். இதில் மூன்று முட்டை, ½ தேக்கரண்டி உப்பு, ½ தேக்கரண்டி மிளகுத்தூள், தேங்காய் துருவல் சிறிதளவு சேர்த்து கிண்டி கடைசியாக கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான முருங்கைக்கீரை முட்டை பொரியல் தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை ட்ரை பண்ணிப் பாருங்கள்.

logo
Kalki Online
kalkionline.com