வாணலி...
வாணலி...

இரும்பு பாத்திரங்களில் சமைக்கலாமா? என்னென்ன சமைக்கலாம்? எப்படி சமைக்கலாம்?

ருகாலத்தில் நமது சமையலறையில்  இரும்பால் செய்யப்பட்ட சமையல் பாத்திரங்களில் சமைப்பதே வழக்கமாயிருந்தது.

நம் மக்கள் கடந்த பல ஆண்டுகளாக விளம்பரங்களில் மயங்கி? நான்ஸ்டிக் பாத்திரங்களின் பக்கம் பார்வையைத் திருப்பியிருந்தாலும்,
அப்பாத்திரங்களின் மீது பூசப்படும்  தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் பற்றிய புரிதலின் காரணமாக சமீபகாலமாக மீண்டும் இரும்பு பாத்திரங்களை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

வரவேற்கதக்க இந்த மாற்றம் நமது உடல் நலம் சார்ந்தது என்பதால், இரும்பு பாத்திரங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று விரிவாகத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

இந்திய வகை உணவுகளை ஆழமாக வறுப்பதற்கும் பொரிப்பதற்கும் இரும்பு கடாய் ஏற்றதாக இருப்பதால் நம் மக்கள் பெரும்பாலும் இரும்பால் ஆன சமையல் பாத்திரங்களைப் பயன்படுத்துகின்றனர். எத்தனை தோசைக்கல் வ‌ந்தாலு‌ம் இரும்பு தோசைக்கல்லுக்கு ஈடு இணை இதுவரை கிடையாது!

இரும்பு பாத்திரங்கள் சிறந்த வெப்பம் கடத்தும் திறனைப் பெற்றுள்ளதால் அவை விரைவில் வெப்பத்தை உறிஞ்சி அவற்றை தக்கவைத்து உணவு ஒழுங்காகவும்,சீராகவும் சமைக்கப்படுவதை உறுதி செய்ய பெரிதும் உதவுகின்றன.

மற்ற உலோகப் பாத்திரங்களை காட்டிலும் இரும்பு பாத்திரங்களில் சமைத்து உண்ணும்பொழுது உணவின் சுவை மிகவும் அருமையாக இருக்கும். இரும்பு பாத்திரங்களில் சமைக்கும்பொழுது அவற்றில் உள்ள இரும்புத் தாதுக்கள் சமையலில் கலந்து உணவில் இரும்புச்சத்தை அதிகப்படுத்தும். மேலும் நம் உடலுக்கும் மூளைக்கும் தேவையான அளவு ஆக்ஸிஜன் கிடைக்கிறது.
இந்தியப் பெண்களில் 80 % பேருக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதால் ரத்த சோகை, உடல் சோர்வு, மனநலம் சார்ந்த பாதிப்புகள் ஏற்படுகின்றன என ஆய்வறிக்கைகள் சொல்வதால், ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க, இரும்பு பாத்திரத்தில் சமைத்து உண்பது மிகவும் சிறந்தது என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

தோசைக்கல், வாணலி, சட்டி,...
தோசைக்கல், வாணலி, சட்டி,...

தோசைக்கல், வாணலி, சட்டி, பணியாரக்கல் என்று பலவிதமான இரும்பு பாத்திரங்களில் சமைத்த உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டால், இரும்புச் சத்து குறைபாடுகள் நீங்கி ஹீமோகுளோபின் அளவு மேம்படும்.
நீரிழிவு நோய் பாதிப்பு, வயிறு மற்றும் குடல் சார்ந்த பிரச்சனை,முடி உதிர்வு பாதிப்பு, கருத்தரிப்பு சிகிச்சை செய்தவர்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை உயர்த்த இரும்பு பாத்திரத்தில் சமைத்து உண்ணலாம்.

இன்றைய இளம் தலைமுறையினர் சிறுவயதிலேயே சந்திக்கும் நரை முடி பிரச்னை, கருப்பை நீர்க்கட்டி, தைராய்டு சுரப்பிகள் கோளாறு போன்ற பல பாதிப்புகளுக்கு அடிப்படை காரணம் ஹீமோகுளோபின் போன்ற மைக்ரோ நியூட்ரியன்ட்களின் குறைபாடு என்பதால் ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதற்கான எளிய வழி இரும்பு பாத்திரச் சமையலே! எனினும், சில வகை உணவுகளை அதில் சமைத்து உட்கொள்வதும் உடலுக்கு  தீங்கு விளைவிக்கும்.


* புளி, தக்காளி, எலுமிச்சை சேர்த்த உணவுகளை ஒருபோதும் இரும்பு பாத்திரத்தில்  சமைக்க வேண்டாம். புளிப்பு நிறைந்த பொருளை சமைக்கும்போது இரும்புடன் சேர்ந்து எதிர் வினைபுரிவதால் ரசம், சாம்பார் போன்றவற்றை இரும்பு பாத்திரத்தில் செய்யக்கூடாது.

* மேலும், பச்சை காய்கறியை சமைக்கும்போது அவை  இரும்புடன் சேர்ந்து எதிர் வினைபுரிந்து கருப்பு நிறமாகிறது. இந்த நிற மாற்றத்தின் நன்மை இன்னும் சரிவர நிரூபிக்கப்படவில்லை என்பதால் வாணலியில் சமைத்தபிறகு, உடனடியாக அதை மற்றொரு பாத்திரத்தில் மாற்றி விடுங்கள்.

இரும்பால் ஆன பாத்திரங்களை சுத்தப்படுத்திப் பராமரிப்பதும் நாம் அவசியமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால் இரும்பு பாத்திரங்களை நீண்ட காலம் உபயோகப்படுத்த முடியும்.

இதையும் படியுங்கள்:
கேலி கிண்டல் செய்யும் நபர்களுக்கு... நீங்க எப்படி பதிலடி கொடுக்கணும் தெரியுமா?
வாணலி...

* இரும்புப் பாத்திரங்கள் மிக எளிதாக துருப்பிடிப்பவை என்பதால் அவற்றை அதிக நேரம் தண்ணீரில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். சுத்தம் செய்வதற்கு முடிந்தவரை இளம் சூடான நீரையே பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் அவை துருப்பிடிப்பதை தடுக்க முடியும்.

* சுத்தம் செய்தபிறகு  வெயிலில் உலர்த்துவதும் நன்கு உலர்ந்த பாத்திரத்தின் மீது  சிறிது எண்ணெய் தடவி வைப்பதும்,  பாத்திரங்களை சுத்தமான மற்றும் ஈரப்பதம் இல்லாத இடங்களில் வைப்பதும் பாத்திரம் நீண்ட நாள் உழைக்க வழி வகுக்கும்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com