இந்த சம்மர் சீசனில் ஜில்லுனு ஜூஸ் குடிக்கலாமா?

பலாப்பழ மில்க் ஷேக்
பலாப்பழ மில்க் ஷேக்Image credit - jaysvegkitchen.blogspot.com
Published on

பலாப்பழ மில்க் ஷேக்

பலாச்சுளைகள் 6

சர்க்கரை 4 ஸ்பூன் 

பால் 2 கப் 

பாலேடு 2 ஸ்பூன்

சுவை மிகுந்த பலாச்சுளைகள் இப்பொழுது நிறைய கிடைக்கின்றன. பலாச்சுளையின் தோல், கொட்டைகளை நீக்கி பழத்தை சர்க்கரையுடன் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும். இத்துடன் ஆறவைத்த பால் கலந்து பரிமாறுவதற்கு முன் பாலேடுகளை மேலாக விட்டு பிரிட்ஜில் வைத்து குளிர வைத்தோ அல்லது அப்படியே பருகலாம்.

மிக்ஸ் ப்ரூட்ஸ் ஜூஸ்:

நாவல் பழம் 1 கைப்பிடி

கருப்பு திராட்சை 1 கைப்பிடி

ஸ்ட்ராபெரி பழங்கள் 4 

சர்க்கரை தேவையானது 

மிளகு 1/2 ஸ்பூன்

உப்பு 2 சிமிட்டு

நாவல் பழத்தில் அரை கப் நீர் விட்டு கொட்டையை கையால் நசுக்கி எடுத்து விடவும். அதேபோல் கருப்பு திராட்சையையும் சிறிது தண்ணீர் விட்டு கையால் நன்கு கசக்கி கொட்டைகளை நீக்கிவிட்டு மிக்ஸியில் மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் சேர்த்து அரைக்கவும். 

வெயிலுக்கு இதமான தாகம் தீர்க்கக் கூடிய இந்த மிக்ஸட் ப்ரூட்ஸ் ஜூஸை ஃப்ரிட்ஜில் வைத்து குளிர வைத்தும் பருகலாம் அல்லது அப்படியேயும் பருகலாம். சப்பு கொட்ட வைக்கும் ருசியை கொண்டது.

அரை நெல்லி ஜூஸ்

அரை நெல்லி ஜூஸ்
அரை நெல்லி ஜூஸ்

அரை நெல்லிக்காய் 1/4 

சர்க்கரை 1/2 கிலோ

விருப்பமான எஸன்ஸ் 1 ஸ்பூன்

இதையும் படியுங்கள்:
கோடை வெயிலில் உதடுகள் வறண்டு போகாமல் இருக்க 4 எளிய வழிகள்!
பலாப்பழ மில்க் ஷேக்

கலர் எதுவும் சேர்க்கத் தேவையில்லை. இட்லி தட்டில் நெல்லிக்காய்களை அலம்பி போட்டு வேகவிடவும். நன்கு வெந்ததும் கொட்டைகளை நீக்கி மிக்ஸியில் அடித்து கூழாக்கவும். அரைக்கப் தண்ணீரில் சர்க்கரையை சேர்த்து கம்பி பாகு பதம் வந்ததும் அரைத்த விழுதை சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும். அவ்வப்போது மறக்காமல் கிளறி விடவும். விருப்பமான எசன்ஸ் சேர்த்து ஆறியதும் எடுத்து பத்திரப்படுத்தவும். தேவைப்படும் சமயம் 1/4 கப் ஜூஸுடன் குளிர்ந்த நீர் கலந்து பருகவும். அமர்க்களமான ருசியில் இருக்கும் இந்த நெல்லி ஜூஸ்.

இதேபோல் பெரிய நெல்லிக்காயிலும் (ஆம்லா) செய்யலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com