கோடை வெயிலில் உதடுகள் வறண்டு போகாமல் இருக்க 4 எளிய வழிகள்!

கோடை வெயிலில் உதடுகள் வறண்டு போகாமல் இருக்க 4 எளிய வழிகள்!
https://tamil.asianetnews.com
Published on

கோடைக் காலத்தில் நமது உடலில் அதிகம் வறட்சியாவது நம்முடைய தொண்டை மற்றும் உதடுகள் என்று கூறலாம். இதில் தொண்டை வறட்சியை தண்ணீரையும் பழச்சாறுகளையும் அருந்தி தணியச் செய்யலாம். தொண்டை வறட்சி என்பது நான் சொன்னாலன்றி வேறு யாருக்கும் தெரியாது. ஆனால், கோடைக்காலத்தில் உதடுகள் வறட்சி என்பது வெளியே பார்ப்பவர் அனைவருக்கும் நன்கு தெரியும்.

உதடுகள் வறட்சிக்கு நிவாரணமாக வீட்டிலேயே இருக்கும் பொருள்களைக் கொண்டு எளிய முறையில் இயற்கையாக நீரேற்றம் பெற்று மினு மினுக்கும் ரோஜா நிற இதழ்களைப் பெற உதவலாம். அதற்கு நாம் செய்ய வேண்டியது என்னவென்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மாதுளம் பழ ஜூஸில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் வைட்டமின்களும் உள்ளன. இந்த ஜூஸை உதடுகளின் மீது நன்கு தடவி ஐந்தாறு நிமிடங்கள் வைத்திருந்து பின் கழுவி விடலாம்.

ஏதாவதொரு பெரி பழத்தைப் பேஸ்ட்டாக்கி, அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து, ஒரு டேபிள் ஸ்பூன் ஆலுவேரா ஜூஸுடன் கலந்து அந்தக் கலவையை உதடுகளின் மேல் முழுவதும் மெதுவாக ஸ்கிரப் பண்ணவும்.

நல்ல சுத்தமான தேனுடன் பிரவுன் சுகர் சேர்த்துக் கலந்து அந்தக் கலவையை உதடுகளின் மேல் மெதுவாக ஸ்கிரப் (scrub) பண்ணவும். இதனால் உதடுகள் ஊட்டச்சத்து கிடைக்கப் பெற்று மிருதுத் தன்மையடையும்.

இதையும் படியுங்கள்:
கோடை காலத்தில் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க 7 எலக்ட்ரோலைட் பானங்கள்!
கோடை வெயிலில் உதடுகள் வறண்டு போகாமல் இருக்க 4 எளிய வழிகள்!

கொழுப்பு அமிலங்களும் வைட்டமின் சத்துக்களும் நிறைந்த மில்க் க்ரீமை (Desi Malai) உதடுகளில் தடவி பதினைந்து நிமிடங்கள் வைத்திருந்து பின் கழுவி விடவும்.

உங்கள் உதடுகளை கோடைக் காலத்தில் ஊட்டச் சத்துக்கள் நிறைந்ததாகவும் நீரேற்றத்துடனும் பராமரிக்க மேற்கண்ட குறிப்புகள் நல்ல பலன் தரும்.

உலர்ந்த உதடுகள் ஊட்டச் சத்துக் குறைபாட்டின் அறிகுறியாகும். எனவே, சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டும் தண்ணீர் மற்றும் பழச் சாறுகளைத் தேவையான அளவு அருந்தியும் உதடுகளை பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com