உளுந்து இல்லாமல் வடை செய்ய முடியுமா?

உளுந்து இல்லாத வடை
உளுந்து இல்லாத வடை

ளுந்து இல்லாமல் வடை போட முடியும். அதுவும் மிக ருசியாக. எப்படி என்று பார்க்கலாம்.

அரிசி மாவு ஒரு கப் 

உப்பு தேவையானது 

தயிர் 3/4 கப்

வெங்காயம் 1

பச்சை மிளகாய் 

தேங்காய் பல் 2 ஸ்பூன்

கருவேப்பிலை சிறிது

பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன்

எண்ணெய் பொரிக்க

அரிசி மாவு, உப்பு, தயிர் ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீரும் கலந்து தோசைமாவு பதத்திற்கு கரைக்கவும். அடுப்பில் அடிகனமான உருளி அல்லது வாணலியை வைத்து அதில் கரைத்து வைத்துள்ள அரிசிமாவை சேர்த்து கிளறவும். கையால் உருண்டை பிடிக்க வரும் வரை கிளறி இறக்கவும். அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய் பற்கள், கறிவேப்பிலை, சிறிது பெருங்காயத்தூள் சேர்த்து பிசைந்து கொண்டு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வடைகளாக தட்டி போட்டு பொரித்தெடுக்கவும். ருசியான மொறு மொறு கரகர வடை தயார்.

இதையும் படியுங்கள்:
பட்டாசு வெடிப்பு; கண்கள் பாதுகாப்பு… என்ன செய்யணும்? என்ன செய்யக்கூடாது?
உளுந்து இல்லாத வடை

பண்டிகைக்கால ஸ்பெஷல் அச்சு முறுக்கு!

அரிசி மாவு ஒரு கப்

மைதா மாவு  1/4 கப்

உப்பு சிறிது

தேங்காய் பால் 1/2 கப் 

சர்க்கரைை 3/4 கப் 

கறுப்பு எள் 1 ஸ்பூன்

எண்ணெய் பொரிக்க

பச்சரிசி மாவு, மைதா, உப்பு, தேங்காய் பால், எள், சர்க்கரை ஆகிய அனைத்தையும் ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் போட்டு நன்கு கலந்து விடவும். தேவையான அளவு நீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். 

அச்சு முறுக்கு
அச்சு முறுக்கு

மாவு கரைக்கும் பதம் மிகவும் முக்கியம். ரொம்பவும் நீர்க்க இருந்தால் மாவு அச்சில் ஒட்டாது. அதேபோல் ரொம்ப கெட்டியாக இருந்தால் மொறுமொறுவென வராது. எனவே சரியான தோசை மாவு பதத்தில் கரைத்து வைத்துக் கொள்ளவும்.

அச்சு முறுக்கு செய்கின்ற அச்சை முதல் நாளே எண்ணெய் தடவி வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும் இந்த அச்சை சூடான எண்ணெயில் முக்கி எடுத்து தோசை மாவு பதத்தில் கரைத்து வைத்திருக்கும் மாவில் வைத்தால் அச்சில் மாவு ஒட்டிக் கொள்ளும். அதனை முக்கி திரும்பவும் எண்ணெயில் வைக்கவும். சிறிது நேரத்தில் அச்சில் இருந்து முறுக்கு தானாகவே கழன்று வந்துவிடும். அப்படி வராத முறுக்கை ஒரு ஸ்பூன் அல்லது முள் கரண்டி (fork) கொண்டு குத்தி விட வந்துவிடும். இருபுறமும் நன்கு பொன்னிறமாகும் வரை பொரித்து  எடுத்து விடவும். சுவையான அச்சு முறுக்கு ரெடி.

எண்ணெய் சூடானதும் மிதமான சூட்டில் வைத்து பொரிக்க முறுக்கு சிவக்காது, கருக்காது நன்றாக வரும். இப்படியே எல்லா வற்றையும்  சூடான எண்ணெயில் முக்கி பிறகு மாவில் முக்கி போட்டு பொரித்தெடுக்கவும். சூப்பரான அச்சு முறுக்கு தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com