பட்டாசு வெடிப்பு; கண்கள் பாதுகாப்பு… என்ன செய்யணும்? என்ன செய்யக்கூடாது?

deepavali festival
deepavali festival
Published on

ல நேரங்களில் பட்டாசு மற்றும் தீ விபத்துகளின்போது முதல் உதவி என்ற பெயரில் எதையாவது செய்து கண் உட்பட உடலின் பல உறுப்புகளையும் கெடுத்துக் கொள்வதும், யார் என்ன சொன்னாலும் உடனே அத்தனையையும் செய்துவிடுவதும், மேலும் இதுகுறித்து பல ஊகங்களும் உள்ளன. உண்மை நிலையை முறையாகத் தெரிந்துகொள்வதே சிறந்தது.


1. வெடி விபத்தினால் முகத்தில் காயம் ஏற்பட்டு கண்ணிலும் காயம் ஏற்பட்டுவிட்டால், முகத்தையும் கண்ணையும் தண்ணீர் விட்டு கழுவவே கூடாது. சுத்தமான துணியைக் கொண்டு முகத்தை லேசாக மூடி உடனடியாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.

2. தீக்காயம் ஏதேனும் கண்ணில் பட்டுவிட்டால் மஞ்சள் தூள், பர்னால், பேனா மை, ஜெர்ஷியன் வைலட், பக்கத்துவீட்டார் சொல்லும் ஆயின்ட்மெண்ட் ஆகியாவற்றைப் போடக்கூடாது. இதனால் எந்த அளவிற்குக் காயம் ஏற்பட்டுள்ளது என்பதை சரியாகத்ச் தெரிந்து கொள்ளமுடியாமல் போய்விடும். மேலும், அவற்றைச் சுத்தம் செய்வதிலும் சிரமம் ஏற்படும்.

3. பாட்டில் மூலமாக ஏவப்பட்ட ஒரு ராக்கெட் வெடித்து ஒரு குழந்தையின் அல்லது ஒருவரது கண்ணை கண்ணாடித் துகளோ அல்லது இரும்புத் துகளோ தாக்கிவிட்டது. ஆனால், கண்களிலிருந்து ரத்தம் ஏதும் வரவில்லை. வலியும் இல்லை. நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? உடனடியாக ஒரு மருத்துவமனைக்கு சம்பந்தப்பட்டவரை அழைத்துச்செல்வதே சிறந்த  காரியம். ஏனெனில் பல நேரங்களில் கண் சார்ந்த விபத்துக்களின் விளைவுகள் உடனடியாகத் தெரிவதில்லை. உடனடியாகக் கண் மருத்துவரின் கவனிப்பு வழங்காவிட்டால் முழுமையான பார்வையிழப்பு உட்பட மோசமான விளைவுகள் ஏற்படலாம்.

4. கண் விபத்துக்குள்ளான குழந்தை அதிக வலியின் காரணமாக கண்ணை அழுத்திப் பிடித்துக்கொள்ளவோ அல்லது கசக்கவோ விரும்புகிறது. இருப்பினும் நாம் செய்யவேண்டியது என்ன தெரியுமா? குழந்தையின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு உடனடியாக கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.கண்களைக் கசக்குவதனால் ரத்தம் அதிகமாக வெளியேறலாம் அல்லது காயத்தின் வீரியம் அதிகரிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
குளிர்காலத்தில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் நான்கு உணவுகள்!
deepavali festival

5. ஒரு குழந்தையின் கண்களை பாட்டில் ராக்கெட், அல்லது வேறு மத்தப்பு தீவிரமாகத் தாக்கிவிட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் தெரியுமா? கண்ணைச் சுற்றிப்  பாதுகாப்பாக பேப்பர் கப் ஒன்றினை முகத்தினில் வைத்து கண்ணை அழுத்தாதவாறு டேப்பினால் ஒட்டி அல்லது பாதுகாப்புக்கான பேட்ச்  அணிவித்து உடனடியாக கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

6. நெருப்புக்காயத்தினால் காயம் பட்ட குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்னால் வலி நிவாரணியாக எந்த மருந்தினையும் கொடுக்கக்கூடாது. ஆஸ்ப்பிரின் அல்லது இபுப்ரோஃபேன் போன்ற மருந்துகளை வலியைத் தாங்கிக் கொள்வதற்காகக் கொடுப்பது தவறு. குழந்தைகளைப் பொறுத்தமட்டில் ஆஸ்ப்பிரின் கண்டிப்பாகக் கொடுக்ககூடாது. இபுப்ரோஃபேன் ரத்தக்குழாய்களை மென்மையானதாக்கிவிடும்.  எனவே ரத்தம் மிக அதிகமாக வெளியேற வாய்ப்பு உள்ளது. எனவே மருந்துகளைத் தவிர்த்து,  ஒருகணம் கூட தாமதிக்காமல் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதே நல்லது.

7. தீ அல்லது பட்டாசு விபத்தினல் காயம் பட்ட குழந்தையின் முதல் தேவை என்ன தெரியுமா? முதலில் காயம்பட்ட குழந்தையை சமாதானம் செய்து அமைதிப்படுத்த வேண்டும். சில பெற்றோர்கள் குழந்தைகளை கோபித்து அதிகமாகத் திட்டி மன அளவில் மேலும் பாதிப்பை ஏற்படுத்துவார்கள்.இது தவறு. ஒரு சுத்தமான துணியை தீக்காயம் பட்ட இடத்தில் சுற்றி உடனடியாக காயம் பட்டவரை அருகில் உள்ள மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.


தொகுப்பு: முனைவர் அ.போ. இருங்கோவேள்,

மேலாளர் – மருத்துவ சமூகவியல்,

சங்கர நேத்ராலயா.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com