புளித்த இட்லிமாவில் இதெல்லாம் கூட செய்யலாமா ?

இட்லி பகோடா
இட்லி பகோடா

இட்லி பகோடா

இட்லிகளை சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

பகோடாவுக்கு:

கடலை மாவு – ½ கப்,  அரிசிமாவு – 1 பிடி, மிளகாய்ப் பொடி 1 ஸ்பூன், உப்பு,டால்டா, மஞ்சள் பொடி சிறிது அளவு.

இதையும் படியுங்கள்:
கணவன் - மனைவிக்குள் அன்பும், காதலும் பெருக அசத்தலான டிப்ஸ்!
இட்லி பகோடா

செய்முறை:

எல்லா பொருட்களையும் கலந்து நீர் விட்டுப் பிசறி வைக்கவும். உடன் இட்லிகளையும் சேர்க்கவும். தூள் போல் இருப்பதை (அதிக தண்ணீர் இல்லாமல்) எண்ணெயில் தூவி விடவும். சிவப்பாக பொரிக்கவும். சுவையான மாலை நேரச் சிற்றுண்டி இது.

 

இட்லி பஜ்ஜி

இட்லி பஜ்ஜி
இட்லி பஜ்ஜி

இட்லிகளை ஸ்லைஸ்களாக செய்யவும்.

பஜ்ஜி மாவுக்கு:

கடலை மாவு - மைதாமாவு ½  கப்,  ¼  கப்,  அரிசிமாவு 1 பிடி, மிளகாய்ப் பொடி 2 ஸ்பூன், உப்பு - சிறிதளவு, காய்ச்சின எண்ணெய் - 1 கரண்டி.

மாவுகளைக் கலந்து கெட்டியாகக் கரைத்துவிட்டு இட்லி துண்டங்களை அதில் தோய்த்து எண்ணெயில் பொரிக்கவும். சூடாக தேங்காய் சட்னியுடன் சாப்பிடவும்.

 

இட்லி வடை

இட்லி வடை
இட்லி வடை

இட்லிகளை உதிர்த்து வைக்கவும்.

வடை மாவுக்கு:

உ.பருப்பு- ¼ கப், கடலை பருப்பு – ¼ கப்,  ப.மிளகாய் 3,  மிளகாய் வற்றல் -3, பெருங்காயம் (விரும்பியவர்கள் மசாலா சாமான்கள்கூட சேர்க்கலாம்) வெங்காயம் - 1.

செய்முறை:  பருப்புகள் எல்லாவற்றையும் நன்கு ஊறவிட்டு கரகரப்பாய் காய்ந்த மிளகா யுடன் அரைத்து, உடன் உதிர்த்த இட்லி துண்டுகளைச் சேர்த்துப் பிசையவும். இதனுடன் தூளாக்கிய வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து கெட்டியாக பிசைந்து உருண்ணடைகளாக்கவும். பிளாஸ்டிக் பேப்பரில் எண்ணெய் தடவி வடைகளாக தட்டி எண்ணெயில் முறுமுறுப்பாக பொரிக்கவும். சூடாக தக்காளி சட்னியுடன் சாப்பிடவும்.

சுவையான இட்லிகள் தயாரிக்க புழுங்கலரிசி 3 கப்பும், பச்சரிசி 1 கப்பும், உ.பருப்பு (கிரைண்டரானால்) ½ கப்பும் (ஆட்டுரல்) என்றால் ¾  கப்பும் சேர்த்து நைசாக தனித்தனியே அரைக்கவும். புளித்த இந்த மாவில் தயாரிக்கப்பட்ட இட்லிகளில் 10 எடுத்துக்கொண்டு மேற்கூறிய ஒவ்வொரு சிற்றுண்டியையும் தயாரிக்கலாம்.

- கே. பாக்யலக்ஷ்மி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com