செட்டிநாடு ஸ்டைல் உக்காரை செய்யலாமா?

Ukkarai
UkkaraiImg Credit: Pinterest
Published on

ஒரு கப் பாசிப்பருப்பு எடுத்துக்குங்க.

ஒரு இரும்பு கடாய் இல்ல நான்ஸ்டிக் கடாயை அடுப்பை சிம்மில் வைத்து ( அடுப்பை சிம்மில் தான் வைக்கணும் ) அதை பச்சை வாசனை போகும் வரை வறுத்து எந்த கப்பில் பாசி பருப்பு எடுத்தோமோ அதே கப்பில் மூன்று கப் தண்ணீரை சேர்த்து, குக்கருக்கு மாற்றி மூன்று விசில் வைத்து  இறக்கி கொள்ளவும். அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இப்போது ஒரு அரை கப்  ரவை, அரை கப் துருவிய தேங்காய், ரெண்டு ஏலக்காயை (ஒரு  ஸ்பூன் சர்க்கரையோடு சேர்த்து பொடி பண்ணியது), அரை கப் அல்லது ஒரு கப் நெய் எல்லாம் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். அதிக நெய் சேர்த்தால் உக்காரை வாயினுள் வழுக்கிக் கொண்டு போகும்.

இப்போது உங்களுக்கு எவ்வளவு முந்திரி வேண்டுமோ, அவ்வளவு எடுத்து நெய்யில் தீய்ந்து போகாமல் அடுப்பை சிம்மில் வைத்து பொன்னிறமாக ரொம்ப பொறுமையாக வறுத்து எடுத்து கொள்ளுங்கள். நிறைய பேர் முந்திரியை மட்டும் கரிய விட்டு விடுவார்கள். அதனால் இதில் கொஞ்சம் கவனமும் பொறுமையும் தேவை. முந்திரி அளவு மட்டும்  நீங்களே எடுத்துக் கொள்ளலாம். அது உங்க சாய்ஸ்.

கடைசியாக ஒரு கப் வெல்லம் எடுத்து துருவி ஒரு கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, ஒரு கப் தண்ணிர் சேர்த்து துருவிய வெல்லத்தை அதில் போட்டு நன்றாக கரைத்து, வடிகட்டி வச்சுடுங்க போதும்.

எல்லாம் ரெடி. இப்ப செய்ய வேண்டியது தான் பாக்கி.

இதையும் படியுங்கள்:
சுகரைக் கட்டுப்படுத்தும் கம்பு பணியாரம்! 
Ukkarai

ஏற்கனவே அரை கப் ரவை எடுத்தோம் அல்லவா? அதை கொட்டி அடுப்பை சிம்மில் வைத்து வறுக்க வேண்டும்.

அது பாதி அளவு வறுபட்டதும் துருவிய தேங்காயை சேர்த்து அதையும் நன்றாக வறுத்து பின், ஏலக்காய், வேக வைத்த பாசிப்பருப்பு , காய்ச்சிய வெல்லம் இதெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கை விடாமல் பத்து நிமிடம் வரை கிளறி கொண்டே இருக்க வேண்டும். இல்லை என்றால் கட்டி கட்டியாகி  விடும்.  

ஓரளவுக்கு திரண்டு வந்தவுடன் வறுத்து வைத்துள்ள முந்திரியை சேர்த்து மீதமுள்ள நெய்யையும் கொஞ்சம் தாராளமாக சேர்த்து கடாயில் ஒட்டாமல் வரும் வரை கிளறி இறக்கினால் உக்காரை ரெடி.

உடனே இவ்வளவு முந்திரி, இவ்வளவு நெய் என்று சண்டைக்கு வர வேண்டாம். இப்படி வகை தொகையாக ஒரு நாள் சாப்பிட்டால் தவறில்லை. வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிப்பதில் இது போல ஒரு நாள் சாப்பிடுவதால் ஒன்றும் குறைந்து போகாது. வீட்டில் கேசரிக்கு பதில் இதை ஒருமுறை செய்து கொடுத்து, எப்படி இருந்தது என்று சொல்லுங்க... மக்களே....         

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com