Aam Panna
Aam Panna

அடிக்கிற வெயிலுக்கு ஜில்லுன்னு ஆம் பன்னா (Aam Panna) குடிக்கலாமா?

Published on

‘ஆம் பன்னா’ இந்தியர்கள் பாரம்பரியமாக கோடைக்காலத்தில் செய்து அருந்தும் பானமாகும். இது அஜீரண கோளாறைப் போக்கும். ஆம் பன்னா என்றால் மாங்காய் ஜீஸ் என்று பொருள். சரி வாங்க இந்த பானத்தை நம்ம வீட்லயே எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

மாங்காய்-2

புதினா இலை- தேவையான அளவு.

சக்கரை-3 தேக்கரண்டி.

வறுத்து பொடி செய்த சீரகம்-1 தேக்கரண்டி.

மிளகு பொடி-1 தேக்கரண்டி.

உப்பு-தேவையான அளவு.

ஏலக்காய் பொடி-1/2 தேக்கரண்டி.

ஐஸ் கட்டிகள்- தேவையான அளவு.

செய்முறை விளக்கம்:

முதலில் குக்கரில் தண்ணீர் ஊற்றி 2 மங்காயை போட்டு 3 விசில் வரும் வரை வேகவைத்துக் கொள்ளவும்.

இப்போது வெந்த மாங்காயை எடுத்து தோலை நீக்கிவிட்டு அதில் உள்ளேயிருக்கும் சதையை மட்டும் தனியாக எடுத்து மிக்ஸியில் போட்டு அத்துடன் புதினா இலை, சர்க்கரை 3 தேக்கரண்டி, வறுத்து பொடி செய்த சீரகம் 1 தேக்கரண்டி, மிளகுத்தூள் 1 தேக்கரண்டி, ஏலக்காய் தூள் ½ தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
வாய்வழி சுகாதாரமே ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம்!
Aam Panna

அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் 4 டம்ளர் குளிர்ந்த நீர் சேர்த்து தேவையான அளவு ஐஸ் கட்டிகளையும் அத்துடன் சேர்த்து நன்றாக கலக்கி விடவும்.

இப்போது ஒரு கண்ணாடி தம்ளரில் ஆம் பன்னாவை ஊற்றி மேலே சில புதினா இலைகளை தூவி பரிமாறவும். இப்போது சுவையான ஆம் பன்னா தயார்.

logo
Kalki Online
kalkionline.com