கீரைகளை வதக்கலாமா? இட்லி பாத்திரத்துல 5 நிமிடம் வேகவைச்சு சமைக்கலாமா?

keerai cooking tips
keerai cooking tips
Published on

கடையில வாங்குற கீரைகள் அகத்திக்கீரை, பசலை, முருங்கைக்கீரை, மணத்தக்காளி கீரை, பருப்புக்கீரை, சிறுகீரை என்று நிறைய கீரைகள் உள்ளன. இவை எல்லாம் உயிர்ச்சத்துகளோட புதையல். ஆனா, சமையல்ல ஒரு சின்ன தப்பு பண்ணா, இந்த சத்துகள் காணாம போயிடும்.

இந்தியாவுல, குறிப்பா நம்ம ஊருல, கீரைகளை வதக்குறது, அப்புறம் கொஞ்சம் எண்ணெய், மசாலா, பூண்டு, வெங்காயம் சேர்த்து கடைஞ்சு சாப்பிடுறது தான் வழக்கம். ஆனா, இப்படி வதக்கும் போது கீரையோட சத்து தப்புமா? தினமும் கீரை சாப்பிடுறோம். ஆனா உடம்புக்கு பலன் கிடைக்காம இருக்கு. ஏன்? நாம நாவிற்குச் சுவையைத் தந்துட்டு, உடல் செல்களுக்கு உயிர்ச்சத்து கொடுக்க மறந்துடுறோம்.

செல்களின் மைண்ட் வாய்ஸ் சொல்லுது:

'நாக்குக்கு மட்டும் சுவையைக் கொடுத்தா போதுமா? உயிர்ச்சத்து இருந்தாத்தானே நாங்க வேலை செய்ய முடியும்!' கீரையை வதக்குறது சரியா? வேற வழி இருக்கா? வாங்க பார்க்கலாம்.

கீரைகளில் உயிர்ச்சத்து என்ன இருக்கு?

கீரைகளில் வைட்டமின்கள், தாதுகள், ஆன்டி ஆக்ஸிடன்டுகள், ஓலியானோலிக் ஆசிட் மாதிரியான சத்துகள் நிறைஞ்சிருக்கு. எடுத்துக்காட்டாக அகத்திக்கீரை அழற்சியைக் குறைக்க உதவுது. பசலை, முருங்கைக்கீரை உடம்புக்கு ஆரோக்கியம் தருது. ஆனா, இந்த சத்துகள் வெப்பம், தண்ணீர், எண்ணெய்க்கு சென்சிடிவ். தப்பான சமையல் முறையால இவை பாதி வரை அழியலாம்.

வதக்குறது உயிர்ச்சத்து தப்புமா?

இந்தியாவுல கீரைகளை வதக்குறது செம பாப்புலர். கடாயில எண்ணெய் ஊத்தி, கடுகு, உளுந்து, வெங்காயம், மசாலா சேர்த்து, கீரையை போட்டு 5 - 10 நிமிடம் வதக்குறோம். இது சுவைய செமயா ஆக்குது. ஆனா உயிர்ச்சத்துக்கு ஆப்பு வைக்குது. அதிக வெப்பம் குறிப்பாக 180-200°C கீரையோட வைட்டமின்கள், ஓலியானோலிக் ஆசிட், ஆன்டி ஆக்ஸிடன்டுகளை பாதி வரை அழிச்சுடுது. எண்ணெய், மசாலா சேர்க்கும் போது சத்து இழப்பு இன்னும் அதிகமாகுது. ஆனா, குறைந்த எண்ணெய், குறைந்த நேரம் (2-3 நிமிடம்) வதக்கினா, சத்து இழப்பை கொஞ்சம் குறைக்கலாம். எடுத்துக்காட்டாக பசலைக்கீரையை சின்னதா நறுக்கி, ஒரு டீஸ்பூன் எண்ணெயில 2 நிமிடம் வதக்கினா, சத்து ஓரளவு தப்புது.

நீராவி வேகவைத்தல் சத்துக்கு சிறந்தது

வதக்குறதுக்கு மாற்றா, நீராவி வேகவைத்தல் செம வழி. 5-7 நிமிடம் நீராவியில் வேக வைச்சா, கீரையோட வைட்டமின்கள், ஓலியானோலிக் ஆசிட் கிட்டத்தட்ட முழுசா பாதுகாக்கப்படுது. தண்ணீரில் கரையுற சத்துகள் வீணாகாம, நீராவி முறை காக்குது. இந்தியாவுக்கு இது கொஞ்சம் புதுசு. ஆனா நல்லது கிடைக்குதுன்னா பயன்படுத்தாம இருக்கலாமா? இட்லி பாத்திரத்துல கீரையை 5 நிமிடம் வேகவைச்சு, பிறகு உப்பு, மிளகு, தேங்காய் துருவல் சேர்த்து சாப்பிடலாம். சுவையும் சத்தும் கம்பைன்ட்.

தண்ணீரில் வேகவைத்தல் எப்படி இருக்கு?

சிலர் கீரையை தண்ணீரில் வேகவைச்சு (boiling) கூட்டு, கடையல் பண்ணுவாங்க. ஆனா, 15 நிமிடத்துக்கு மேல வேகவைச்சா, சத்துகள் தண்ணீரில் கலந்து வீணாகும். குறைந்த தண்ணீர், 5 நிமிடம் வேகவைச்சா, சத்து ஓரளவு தப்புது. எடுத்துக்காட்டாக, முருங்கைக்கீரையை குறைந்த தண்ணீரில் வேகவைச்சு, சாம்பார், கூட்டு பண்ணலாம்.

இதையும் படியுங்கள்:
கோடை விடுமுறையில் குழந்தைகள் பயனுள்ள வகையில் என்னவெல்லாம் செய்யலாம்?
keerai cooking tips

சத்து காக்கும் 5 சமையல் டிப்ஸ்:

குறைந்த நேரம்: 5-7 நிமிடத்துக்கு மேல் வேகவைக்க வேணாம்.

நீராவி முறை: இட்லி பாத்திரத்துல 5 நிமிடம் வேகவைச்சு, உயிர்ச்சத்து காக்கவும்.

குறைந்த தண்ணீர்: தண்ணீரில் வேக வைச்சா, குறைந்த நீரை பயன்படுத்தவும்.

வதக்கும்போது கவனம்: ஒரு டீஸ்பூன் எண்ணெய், 2-3 நிமிடம் மட்டும் வதக்கவும்.

பச்சையா முயற்சி: பசலைக்கீரையை சாலடா, ஜூஸா சாப்பிடவும்.

கீரை வாங்கும்போது யோசிங்க: நாக்குக்கு சார்ஜ், செல்களுக்கு ரீசார்ஜ் குடுக்கணும்னு முடிவு பண்ணுங்க. வதக்குறத குறைச்சு, 5-7 நிமிட நீராவியில வேகவைங்க. இன்னைக்கு கீரையால செல்களை பவர் அப் பண்ணுங்க.

இதையும் படியுங்கள்:
பயணமா? ஆன்லைன் புக்கிங்கா? இந்த எச்சரிக்கை உங்களுக்குத் தான்!
keerai cooking tips

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com