
இன்றைக்கு சுவையான பட்டன் இட்லி மற்றும் தக்காளி ஊறுகாய் ரெசிபிஸை வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
பட்டன் இட்லி செய்ய தேவையான பொருட்கள்.
அவல்-1 கப்.
முட்டை வெள்ளை கரு-2.
ரவை-1 கப்.
தயிர்- ¼ கப்.
சில்லி பிளேக்ஸ்-1 தேக்கரண்டி.
உப்பு- தேவையான அளவு.
கொத்தமல்லி-சிறிதளவு.
எண்ணெய்-சிறிதளவு.
கடுகு-1 தேக்கரண்டி.
சீரகம்-1 தேக்கரண்டி.
எள்-1 தேக்கரண்டி.
பட்டன் இட்லி செய்முறை விளக்கம்.
முதலில் பவுலில் ஒரு கப் அவல் சேர்த்து 2 முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து நன்றாக கலந்து சிறிது தண்ணீர் விட்டு கலந்து ஊற வைத்துக்கொள்ளவும். இப்போது 1 கப் ரவைக்கு ¼ கப் தயிர் சேர்த்து நன்றாக கிளறி வைத்துக் கொள்ளவும்.
பிறகு ஊறவைத்த அவலையும் இதில் சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக் கொள்ளவும். இதில் 1 தேக்கரண்டி சில்லி பிளேக்ஸ், உப்பு தேவையான அளவு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து கலந்துவிட்டுக் கொள்ளவும்.
இப்போது இந்த மாவை சின்ன சின்னதாக இட்லி போல தட்டி இட்லி பாத்திரத்தில் வைத்து பத்து நிமிடம் வேகவைத்து எடுக்கவும். கடாயில் எண்ணெய சிறிது விட்டு கடுகு 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, எள் 1 தேக்கரண்டி சேர்த்து அத்துடன் தயார் செய்து வைத்திருக்கும் இட்லியை சேர்த்து 2 நிமிடம் ரோஸ்ட் செய்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான பட்டன் இட்லி தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
தக்காளி ஊறுகாய் செய்ய தேவையான பொருட்கள்.
பொடி செய்ய,
கடுகு-1 தேக்கரண்டி.
வெந்தயம்-1 தேக்கரண்டி.
எண்ணெய்- 1 குழிக்கரண்டி.
தக்காளி-10
புளி- லெமன் அளவு.
கடுகு-1 தேக்கரண்டி.
வெந்தயம்-1 தேக்கரண்டி.
வரமிளகாய்-5
கருவேப்பிலை-சிறிதளவு.
பூண்டு-10
பெருங்காயத்தூள்-சிறிதளவு.
ஊற வைத்து அரைத்த மிளகாய் பேஸ்ட்-2 தேக்கரண்டி.
மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.
உப்பு-தேவையான அளவு.
தக்காளி ஊறுகாய் செய்முறை விளக்கம்.
முதலில் ஃபேனில் 1 தேக்கரண்டி கடுகு, 1 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து நன்றாக வறுத்து மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும். இப்போது கடாயில் சிறிது எண்ணெய் விட்டு பழுத்த 10 தக்காளியை நறுக்கி சேர்த்துக்கொள்ளவும். சற்று வதங்கியதும் குட்டி லெமன் அளவு புளியை கரைத்து இத்துடன் சேர்த்து கிண்டி மூடி வைத்துவிடவும். தக்காளி நன்றாக கெட்டியாகிவிடும்.
இப்போது கடாயில் 1 குழிக்கரண்டி எண்ணெய் விட்டு அதில் கடுகு 1 தேக்கரண்டி, வெந்தயம் 1 தேக்கரண்டி, வரமிளகாய் 5, கருவேப்பிலை சிறிதளவு, பூண்டு 10, பெருங்காயத்தூள் சிறிதளவு, ஊறவைத்து அரைத்த மிளகாய் பேஸ்ட் 2 தேக்கரண்டி சேர்த்துக்கொள்ளவும்.
இப்போது ¼ தேக்கரண்டி மஞ்சள் தூள், அரைத்து வைத்திருக்கும் கடுகு வெந்தயப்பொடி சேர்த்து கடைசியாக வேக வைத்திருக்கும் தக்காளி சேர்த்து உப்பு தேவையான அளவு சேர்த்து 10 நிமிடம் மூடி வைக்கவும். நன்றாக சுண்டி வந்ததும் இறக்கிவிடவும். இந்த ஊறுகாயை பாட்டிலில் சேமித்து வைத்துக்கொண்டு பயன்படுத்தவும். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப்பார்த்துட்டு சொல்லுங்க.