
இன்றைக்கு சுவையான மோர் களி மற்றும் பீட்ரூட் பரோட்டா ரெசிபியை வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
மோர்களி செய்ய தேவையான பொருட்கள்.
தயிர்-1 கப்.
அரிசி மாவு-1 கப்.
உப்பு-தேவையான அளவு.
தேங்காய் எண்ணெய்-2 தேக்கரண்டி.
கடுகு-1தேக்கரண்டி.
உளுந்து-1 தேக்கரண்டி.
கடலைப்பருப்பு-1 தேக்கரண்டி.
மோர் மிளகாய்-2
பெருங்காயத்தூள்-சிறிதளவு.
மோர்களி செய்முறை விளக்கம்.
முதலில் பவுலில் 1 கப் தயிரை எடுத்துக்கொண்டு அதில் 4 கப் தண்ணீர் விட்டு நன்றாக கரைத்துக் கொள்ளவும். இப்போது இதில் அரிசி மாவு 1 கப் சேர்த்து நன்றாக கரைத்துக்கொள்ளவும். இதில் தேவையான அளவு உப்பை சேர்த்துக்கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து தேங்காய் எண்ணெய் 2 தேக்கரண்டி விட்டு கடுகு1 தேக்கரண்டி, உளுந்து 1 தேக்கரண்டி, கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி, கருவேப்பிலை சிறிதளவு, மோர் மிளகாய் 2, பெருங்காயத்தூள் சிறிதளவு சேர்த்து கலந்துவிட்டு இதில் கரைத்து வைத்திருக்கும் மோரை சேர்த்து நன்றாக கைவிடாமல் கிளறவும்.
இதில் நடுவே தேங்காய் எண்ணெய் சிறிது ஊற்றி கிண்டவும். மோர்களி நன்றாக கெட்டியாகி வரும். இதை அப்படியே சூடாக எடுத்து பரிமாறலாம் அல்லது ஆறிய பிறகு துண்டு துண்டாக வெட்டி பரிமாறலாம். இந்த ரெசிபியை நீங்களும் வீட்டிலே ட்ரை பண்ணிப் பாருங்கள்.
பீட்ரூட் பரோட்டா செய்ய தேவையான பொருட்கள்.
பீட்ரூட்-1
கோதுமை-1கப்.
எண்ணெய்-1 தேக்கரண்டி.
உப்பு-தேவையான அளவு.
வெங்காயம்-1
பச்சை மிளகாய்-2
மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.
மல்லித்தூள்-1 தேக்கரண்டி.
சீரகத்தூள்-1/2 தேக்கரண்டி.
இஞ்சிபூண்டு பேஸ்ட்-1 தேக்கரண்டி.
கரம் மசாலா-1/2 தேக்கரண்டி.
துருவிய பீட்ரூட்-1/2 கப்.
கஸ்தூரி மேத்தி-சிறிதளவு.
நெய்-தேவையான அளவு.
பீட்ரூட் பரோட்டா செய்முறை விளக்கம்.
முதலில் பீட்ரூட் 1 துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் சிறிது விட்டு நன்றாக அரைத்து வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இப்போது ஒரு பவுலில் கோதுமை 1 கப், உப்பு சிறிதளவு, எண்ணெய் 1 தேக்கரண்டி ஊற்றி அதில் செய்து வைத்திருக்கும் பீட்ரூட் ஜூஸை சேர்த்து நன்றாக சப்பாத்தி மவு பதத்திற்கு பிசைந்துவிட்டு பத்து நிமிடம் மூடி வைக்கவும்.
இப்போது ஒரு பவுலில் பொடியாக வெட்டி வைத்திருக்கும் வெங்காயம்1, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 2, துருவிய பீட்ரூட் ½ கப் சேர்த்துவிட்டு இதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 தேக்கரண்டி, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, மல்லித்தூள் 1 தேக்கரண்டி, கரம் மசாலா 1/2 தேக்கரண்டி, சீரகத்தூள் ½ தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு, கஸ்தூரி மேத்தி சிறிதளவு சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக் கொள்ளவும்.
இப்போது சப்பாத்தி மாவை நன்றாக திரட்டி அதில் செய்து வைத்திருக்கும் கலவையை நடுவிலே வைத்து இன்னொரு சப்பாத்தியை வைத்து மூடி கல்லில் நெய் தடவி விட்டு அதில் பீட்ரூட் பரோட்டாவை போட்டு நன்றாக இருபக்கமும் வேகவைத்து எடுத்து பரிமாறவும். சுவையான பீட்ரூட் பரோட்டா தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பாருங்கள்.