சுவையான 'மலாய் மட்டர் பன்னீர்' கிரேவி செய்யலாம் வாங்க!

Malai Mutter Paneer Gravy
Malai Mutter Paneer GravyImage Credits: Picxy
Published on

லாய் மட்டர் பன்னீர் என்பதில் ‘மட்டர்’ என்றால் ஹிந்தியில் பட்டாணி என்று பொருள். இந்த கிரேவி வகை பார்ப்பதற்கு கிரீமியாக, சற்று இனிப்பும் மசாலா பொருட்களும் சேர்ந்து மிகவும் ஆடம்பரமான தோற்றத்தையும், சுவையையும் கொடுக்கிறது. இந்த உணவு வகை பஞ்சாபில் இருந்து உருவானதாகும். ஆனால் இந்தியர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் ஒவ்வொரு விதமாக இதை செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது முகலாயர்கள் காலத்தில் உருவான உணவு வகை என்றும் கூறுவதுண்டு.

தேவையான பொருட்கள்;

வெங்காயம்-2

பூண்டு-6

பச்சை மிளகாய்-2

முந்திரி-10

மிளகு-5

ஏலக்காய்-5

பட்டை- ஒரு துண்டு.

சீரகம்-2 தேக்கரண்டி.

மல்லி தூள்-1 தேக்கரண்டி.

கிராம்பு-3

பால்-1/2 கப்

பிரியாணி இலை-1

இஞ்சி-1 துண்டு.

பட்டாணி-1கப்.

பன்னீர்-1கப்.

உப்பு- தேவையான அளவு.

எண்ணெய்- தேவையான அளவு.

செய்முறை விளக்கம்:

முதலில் அடுப்பில் ஃபேனை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி அதில் மிளகு, ஏலக்காய், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை ஆகியவற்றை போட்டுக்கொள்ளவும். இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கி விட்டு அத்துடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். முந்திரி 10 சேர்த்து சிறிது பால் சேர்த்து நன்றாக வேக விடவும்.

இப்போது இந்த கலவையை மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும். அடுப்பில் ஒரு ஃபேனை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சீரகம் 2 தேக்கரண்டி, ஏலக்காய் 4 சேர்த்து அத்துடன் அரைத்து வைத்திருக்கும் கலவையை சேர்த்து கிண்டி தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைத்த பட்டாணி 1 கப் சேர்த்து கின்டவும்.

இதையும் படியுங்கள்:
இந்த மாதிரி ‘காரசாரமான’ உருளைக்கிழங்கு ரெசிப்பீஸ் சாப்பிட்டு இருக்கீங்களா?
Malai Mutter Paneer Gravy

அத்துடன் பன்னீரை சிறிது துண்டுகளாக வெட்டி தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி ஃப்ரை செய்து அதையும் இந்த கலவையுடன் சேர்த்துக்கொள்ளவும். கடைசியாக பால் ஊற்றி மல்லித் தூள் 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக கின்டிவிட்டு இறக்கவும். அவ்வளவு தான் சுவையான மலாய் மட்டர் பன்னீர் குருமா தயார். இதை சப்பாத்தி, பூரியுடன் சேர்த்து சாப்பிடும்போது சுவை அல்டிமேட்டாக இருக்கும். இந்த குருமாவின் வெள்ளை நிறம்தான் இதற்கு மேலும் ரிச் லுக் தருவது. நீங்களும் வீட்டில் ஒருமுறை செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com